உலகம்

அந்தாட்டிக்காவை தாக்கிய கொரோனா – 36 பேர் தனிமைப்படுத்தலில்

உலகில் இதுவரை கொரோனா தொற்று அறியப்படாத கண்டமான அந்தாட்டிக்காவிலும் கொரோனா பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எட்டு கண்டங்களில் ஒன்றான அந்தாட்டிக்காவுக்கு சாதாரணமாக சுற்றுலாப் பயணிகளும், ஆய்வாளர்களும் சென்று வருகின்றனர்.

அத்துடன் சிலி நாட்டை சேர்ந்த ஜெனரல் பெர்னார்டோ ஒஹிக்கின்ஸ் ரிகீல்மி ஆய்வு மையம் அண்டார்டிகாவில் இருக்கிறது. இங்கு திங்களன்று 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில், சிலி ராணுவத்தை சேர்ந்த 26 பேரும், 10 பராமரிப்பு ஊழியர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இவ் 36 பேரும் சிலியில் உள்ள புன்டா அரினாஸ் நகரத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

அந்தாட்டிக்காவில் மேலும் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அங்குள்ள அனைத்து முக்கிய ஆராய்ச்சி திட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles