உலகம்

எதற்கு உங்களுக்கு பிக்பாஸ்? ரசிகரின் கேள்விக்கு கமலின் பதில்

திரைப்படம், நெடும் தொடர்களை தாண்டி சின்னத்திரையில் மற்றுமொரு மயில்கல்லை ஏற்படுத்தியுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி.

இவ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது ரசிகர்களின் ஆர்வத்துக்ககு மற்றுமொரு காரணமாக உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் போட்டியார்களிடம் கடந்த சில வாரங்களாக ரசிகர்களில் ஒருவருக்கு அழைப்பினை ஏற்படுத்தி கேள்வி கேட்டுகும் வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

கடந்த நிகழ்ச்சியில் இவ்வாறு வாய்ப்பு வழங்கப்பட்டபோது அழைப்பினை ஏற்படுத்திய ரசிகர் முதலில் கமல்ஹாசனிடம் எதற்கு உங்களுக்கு பிக்பாஸ்? என்ற பாணியில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அவரின் கேள்விக்கு உலகநாயகன் விளக்கமான பதிலையும் வழங்கினார்.

ரசிகரின் கேள்வி: சினிமாவில் நீங்கள் பார்க்கா புகழ் இல்லை பெறாத விருது இல்லை பண்ணாத பாத்திரம் இல்லை. இத்தனை சாதனைகள் செய்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது.

கமலின் பதில் : இங்கு அரசியல் பேசினால் மக்களை சென்றடையும் என்பதற்காக மட்டுமில்லை. என்னை பல மாதிரி பார்த்திருக்கிறீர்கள் என்பதை கேட்கும்போதே புல்லரிக்குது.

என்னை நானாக நான் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி இது.
5 வயதில் இருந்து 50 வரை என்னை பார்க்கிறீர்கள் பாராட்டுகிறீர்கள். அதில் எல்லாம் இல்லாத மகிழ்ச்சி. நீங்கள் நான் வரும் போது நீங்கள் கொடுக்கும் வரவேற்பு கொடுக்கிறது.

இந்த நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கும் போது என் குடும்பத்துடன் இருந்து உங்களின் நானாக என்னை பார்ப்பதாக உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வயதுக்கு என்று இல்லாமல் பாட்டிமார்கள், சகோதரிகள், சின்னப்பிள்ளைகள் என பல தரப்பு ரசிகர்களும் உள்ளனர்.

சினிமா பார்க்காட்டியும் கூட சிறு பிள்ளைகள் என்னை தெருவில் பார்த்ததும் பிக்பாஸ் என்று கூறுகின்றனர். ஆகையால் இந்த நிகழ்ச்சி எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு என்றார்.

 

 

Hot Topics

Related Articles