உலகம்

வெற்றிலை எச்சிலால் வந்த வினை! வீதியில் பயணித்த மூவர் தனிமைப்படுத்தலில்

பலங்கொடையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் வெற்றிலை மென்று எச்சில் துப்பியதையடுத்து வீதியில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந் மூன்று பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சனிக்கிழமை பலங்கொட, சமனலவெவ பகுதியில் உள்ள சிகிச்சை மையத்திற்கு கொழும்பிலிருந்து கொரோனா தொற்றாளர்கள் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸுக்குள் இருந்த பெண் ஒருவர் ஜன்னலினூடாக வெற்றிலை எச்சிலை துப்பியுள்ளார்.

இதன் போது பஸ்ஸூடன் அருகில் பயணித்த மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது எச்சில் சிதறியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் அவசரகால எண் (119)ஊடாக பொலிஸாரிடம் முறைபாடு செய்ததையடுத்து அந்த நபரையும் அவரது குடும்பத்தினரையும் உடனடியாக சுயமாக தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அவரது மோட்டார் சைக்கிள் சுகாதார அதிகாரிகளால் கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

Hot Topics

Related Articles