உலகம்

நுவரெலியா செல்ல விரும்புபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

நுவரெலியாவுக்கு பிரவேசிக்க விரும்புவர்கள் தமது பிரதேசத்தின் பொது சுகாதார பரிசோதகரிடமிருநந்து (பி.எச்.ஐ) அனுமதி சான்றிதழ் பெற்று தன்னுடன் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கூடுதல் முன்னெச்சரிக்கைகள் நவடிக்கைகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக நுவரா எலியா மேயர் சந்தனா லால் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இவ் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பண்டிகை காலத்திற்காக நுவரெலியாவுக்கு வருகை தரும் வெளிபிரதேசங்களை சேர்ந்தவர்கள் உள்ளூர் சுகாதார அதிகாரிகளிடமிருந்து தாங்கள் பாதிக்கப்படவில்லை அல்லது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் உள்ள அனைத்து ஹோட்டல்களுக்கும் ஓய்வு இல்லங்களுக்கும் மாவட்டத்திற்கு வெளியில் இருந்து வருபவர்களை பொது சுகாதார பரிசோதகரிடமிருநந்து பெற்றுக்கொள்ளப்பட்ட அனுமதி சான்றிதழை சமர்ப்பிக்காவிட்டால் தங்க அனுமதிக்க வேண்டாம் என்று அறிவித்துள்ளதாக மேயர் மேலும் தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று அரசாங்கம் ஏற்கனவே பொதுமக்களை, குறிப்பாக மேல் மாகாணத்தில் உள்ளவர்களை வலியுறுத்தியுள்ளது.

எதிர்காலத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு தனது எல்லைகளைத் திறக்கத் தொடங்கியுள்ள நிலையில், நுவரெலியா பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இவ் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக மேயர் தெரிவித்துள்ளார்.

Hot Topics

Related Articles