உலகம்

காரில் பயணித்தப்படி 10 ஆயிரம் பேர் கலந்து கொண்ட திருமண நிகழ்வு!

கொரோனா தொற்றுக்கு மத்தியில், மலேசியா, புத்ராஜெயா எம்.பி. டத்துக் செரி தெங்கு அட்னான் தெங்கு மன்சோரின் மகனின் திருமணவிழாவில் 10,000 பேர் கலந்து கொண்டனர்.

மலேசியாவில் புத்ராஜெயாவலி நேற்று நடந்த இவ் திருமணவிழாவில் “டிரைவ்-த்ரூ” முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இடம்பெற்றது.

புதுமணத் தம்பதிகள் அமர்ந்து விருந்தினர்களுக்கு கை அசைக்க நீதி அரண்மனைக்கு முன்பாக ஒரு சிறப்பு மேடை அமைக்கப்பட்டது, விருந்தினர்கள் தங்கள் வாகனங்களில் அந்த இடத்திலிருந்து வெளியேறும் போது ஒரு சிறப்பு கூடாரத்தில் உணவுப் பொதிகளை எடுப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Datuk Seri Tengku Adnan Mansor (5th right), his wife Datin Seri Anggraini Sentiyaki (2nd right), the groom Tengku Muhammad Hafiz (centre) and bride Oceane Cyril Alogia (3rd right) wave to guests at Dataran Putrajaya December 20, 2020. — Bernama pic
திருமண வரவேற்புக்கு வந்த அனைத்து விருந்தினர்களுக்கும், புதிய முறையின் கீழ் உபசரிப்பு மேற்கொள்ளப்பட்டதுடன் தம்பதியினரின் குடும்பத்தினரும் நன்றி தெரிவிதுள்ளனர்.

புத்ராஜெயாவில் உள்ள அனைத்து மக்களும் தங்கள் குடும்பம் என கருதுவதால் அவர்களின் திருமணத்தை மக்களுடன் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று அவர்கள் விரும்பியுள்ளனர்.

இந்நிலையில் எம்பியின் யோசனைப்படி ‘டிரைவ்-த்ரூ“ முறையை செயற்படுத்தி திருமண நிகழ்வை நடத்தியுள்ளனர்.

A view of the drive-through wedding for Datuk Seri Tengku Adnan Mansor’s son Tengku Muhammad Hafiz and his bride Oceane Cyril Alogia in front of the Palace of Justice in Dataran Putrajaya December 20, 2020. — Picture via Twitter/@maliqueredzuan

 

மலேசியாவில் நேற்றைய தினம் வரை 93,309 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 437 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். அத்துடன் நேற்றைய தினம் அங்கு 1,340க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles