உலகம்

“தி சன்” செய்தித்தாளில் இடம்பிடித்த இலங்கையின் கொரோனா பாணி – வைத்தியரின் வீட்டின் முன்னால் இன்றும் காத்திருந்த மக்கள்

கொரோனா தொற்றை குணமடைய செய்யும் என தெரிவித்து அண்மையில் கேகாலையை சேர்ந்த சுதேச வைத்தியர் தம்மிக்க பண்டார என்பவர் புதிய ஔடத பாணி ஒன்றை தயாரித்து மக்களுக்கு வழங்கி நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இச் செய்தியை இங்கிலாந்தின் “தி சன்“ செய்தி நிறுவனம் தமது பத்திரிகை மற்றும் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

கடவுளால் தெரிவிக்கப்பட்ட செய்முறைக்கு அமைய தாயரிக்கப்பட்டுள்ள இவ் ‘அதிசய சிகிச்சை’ மூலம் கொரோனாவை இலங்கையில் ஒருவர் குணப்படுத்துவதாக தெரிவிப்பதாக அந்தக் கட்டுரையில் தெரிவிக்கக்கட்டுள்ளது.

கட்டுரையின் தலைப்பில்,
“கடவுளின் பரிசு- தச்சரின் வீட்டிற்கு 12,000 அதிகமானோர் வருகை, அதிசயம்‘ கொரோனாவை குணப்படுத்தும் பாணி கடவுளால் அவருக்கு வெளிப்படுத்தப்பட்டதாகக் கூறுகிறார்.

இருப்பினும், குறித்த செய்தியில் கேகாலையைச் சேர்ந்த ‘ஆன்மீக வாதி’ தம்மிக பண்டாரவின் புகைப்படத்திற்குப் பதிலாக புகழ்பெற்ற பாடலாசிரியர் தம்மிக பண்டாரவின் புகைப்படத்தை தவறாக வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரசினை குணப்படுத்த கூடிய ஆயுர்வேத மருந்து தன்னிடமுள்ளதாக சுதேச வைத்தியர் தம்மிக்க பண்டார தெரிவித்திருந்ததையடுத்து, சுகாதார அமைச்சர் மருத்துவரின் வீட்டிற்கு சென்று மருந்தினை அருந்தியிருந்தனர்.

இந்நிலையில் சுதேச வைத்தியர் தம்மிக்க பண்டாரவினால் வீட்டிற்கு இன்றும் நூற்றுக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மீறப்பட்ட நிலையில் கூட்டமாக திரண்டு பாணிக்காக காத்திருந்தனர்.

அவருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து பொலிஸாரினால் மக்கள் திருப்பியனுப்பப்பட்டனர்.

Hot Topics

Related Articles