உலகம்

17 மாற்றங்களை காண்பிக்கும் கொரோனா வைரஸ்

லண்டன் மற்றும் தென்கிழக்கு வழியாக பரவியிருக்கும்கொரோனா வைரஸின் முக்கியமான ஸ்பைக் புரதத்தில் 17 மாற்றங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா வைரசின் கட்டமைப்பில் உருவாகியுள்ள விகாரத்தை ஆராய்ந்து வரும் இங்கிலாந்தின் கோவிட் -19 ஜெனோமிக்ஸ் யுகே கூட்டமைப்பு (சிஓஜி-யுகே) உறுப்பினர்கள், இவ் மாற்றங்கள் குறித்து விவரித்துள்ளனர்.

வைரஸின் ஸ்பைக் புரதத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, இது மனித உயிரணுக்களில் அடைத்து நோயை ஏற்படுத்துகிறது. என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வைரஸின் ஸ்பைக் புரதத்தின் மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை, ஏனென்றால் ஃபைசர் / பயோஎன்டெக்கின் அங்கீகரிக்கப்பட்ட பெரும்பாலான கொரோனா தடுப்பூசிகள் இந்த புரதத்தை குறிவைத்து செயல்படுகின்றன.

இந்த மாற்றங்கள் கொரோனா தாற்றாளரின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் என்று அஞ்சப்படுகிறது.

ஆனால் இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் விட்டி உள்ளிட்ட விஞ்ஞானிகள், ‘தற்போது வரை இதற்கு எந்த ஆதாரமும் இல்லை’ என்று கூறியுள்ளனர்.

அத்துடன் வேல்ஸ், ஸ்காட்லாந்து, டென்மார்க் மற்றும் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் பிறழ்வுகள் தடுப்பூசிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்

 

Hot Topics

Related Articles