வாட்ஸ்அப் செயலியில் அடுத்த ஆண்டு முதல் மெசேஜிங் பயன்பாட்டின் (டெஸ்க்டாப் பதிப்பிற்கு) கணினி பயன்பாட்டிற்கு குரல் மற்றும் வீடியோ அழைப்பு அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பெரிய திரைகளில் அழைப்புகளை எளிதாக்குவதற்கான நடவடிக்கை வாட்ஸ் உருவாக்க எதிர்பார்த்துள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள வீடியோ-கான்பரன்சிங் செயலிகளான ஸூம் மற்றும் கூகுள் மீட்டிங் போன்றவற்றுக்கு இணையாக இது செயற்பட உள்ளது.
உலகளவில் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட, வாட்ஸ்அப் அதன் தாய் நிறுவனமான பேஸ்புக் இன்க் பயன்பாட்டிற்கு அடுத்தபடியாக உள்ளது, இருப்பினும் இது ஸூம் அல்லது கூகுள் மீட் போன்ற செயலிகள் போன்று அன்றி பெரிதும் தனிப்பட்ட அழைப்புகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், வாட்ஸ்அப்பின் இவ் புதிய அம்சம் ஸூம் மற்றும் கூகுள் மீட் செயலிகளின் பயன்பாட்டில் வீழ்ச்சியை ஏற்படுத்தலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.