மாத்திரைகள் இல்லாம மாதவிடாய் தாமதமாக இதோ சில வீட்டு வைத்தியங்கள்!

மாதவிடாய் நாட்களில் பெண்கள் அசெளகரியமாக உணர்வதால் அந்த நாட்களில் வெளியே செல்லாமல் பெரும்பாலும் வீட்டிலேயே இருக்கவே அவர்கள் விரும்புவார்கள்.

இதனால் பண்டிகை நாட்கள் முக்கியமான விழாக்கள் மற்றும் நீண்ட பயணங்களின் போது மாதவிடாயை தவிர்க்கவே பெண்கள் விரும்புவார்கள்.

இதற்காக பாமசிகளில் விற்கப்படும் மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை பெண்கள் வழமையாக கொண்டுள்ளனர்.

எனினும் மாத்திரைகள் உட்கொள்வதனால் ஹார்மோன் சுழற்சியில் மாற்றம் ஏற்படுவதுடன் உடலின் இயற்கையான செயற்பாடு பாதிப்படைகின்றது.

மாதவிடாய் தள்ளி போக அடிக்கடி மாத்திரை உட்கொள்வது கருத்தரிப்பதிலும் பிரச்சனையை உண்டாக்கும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாகவே மாத்திரைகளை அதிகம் பயன்படுத்த வேண்டாம் என்று வைத்தியர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

இதற்கு மாற்று வழியாக இயற்கை வைத்தியம் மூலம் பக்க விளைவில்லாமல் சில நாட்கள் மாதவிடாய் தள்ளி வைக்கலாம்.

இதற்காக இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு செய்யக்கூடிய சில குறிப்புகள்….
​அப்பிள் சீடர் வினிகர்.

அப்பிள் சீடர் வினிகர் மாதவிடாய் தள்ளி போக உதவும்

மாதவிடாய் ஏற்படும் தினத்திற்கு முன்பதாக உள்ள 10 நாட்களும் தினமும் தினமும் ஒரு கொப்பை நீரில் 3 தேகரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து குடிக்க வேண்டும். இது 4 முதல் ஒரு வாரம் வரை உங்கள் மாதவிடாய் நாட்களை தள்ளிபோக செய்யும். அத்துடன் உடலில் இருக்கும் நச்சையும் வெளியேற்றும்.

மீண்டும் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தபோக்கு உண்டாகாமல் தடுக்க சீடர் வினிகர் உதவும்.

​எலுமிச்சை சாறு

மாதவிடாய் ஏற்படும் தினத்திற்கு முன்பதாக தொடர்ந்து ஒரு வாரம் வரை எலுமிச்சை சாற்றை ஒரு கோப்பை நீரை கலந்து குடிக்க வேண்டும். இது மாதவிடாய் காலத்தை தாமதமாக்கும். மேலும் வரும் மாதவிடாய் கால கட்டத்தில் உதிரபோக்கு அசெளகரியம் இல்லாமல் இலகுவானதாக இருக்கும்.
அவதானம் ; அமிலம் நிறைந்ததால் இது பற்கள், ஈறுகள், வயிறு குடல்களில் பயணிக்கும் போது அது எரிச்சலை அடைய செய்யலாம்.

​ஜெலட்டின்

ஜெலட்டின் தூளை வெதுவெதுப்பான நீரில் கரைத்து குடிப்பதால் அது குறைந்தது நான்கு மணி நேரமாவது உங்கள் மாதவிடாய் காலத்தை தள்ளிவைக்கும்.

ஜெலட்டின் மாதவிடாய் ஒரு நாள் முதல் ஒரு வாரம் வரை தள்ளி வைக்க உதவுகிறது. இது மாதவிடாய் சுழற்சியின் வேகத்தை குறைக்க செய்கிறது. .
அவதானம் ; இதை அதிகமாக எடுத்துகொள்ளும் போது இது செரிமானம், மன உளைச்சல் போன்ற சில பக்கவிளைவுகளையும் உண்டாக்கும்.

​பருப்பு வகைகள்

மாதவிடாய்க்கு முந்தைய ஒரு வாரகாலத்திலிருந்து பருப்பை மிதமாக வருத்து பொடியாக்கி வைத்துகொண்டு சூப் போன்று செய்து குடித்துவரலாம். பயறு வகைகளில் பொட்டாசியம் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மாதவிடாய் சுழற்சியை தள்ளிவைப்பதுடன் அதற்கு பிந்தைய மாதவிடாய் தொடர்பான அறிகுறிகளையும் மெதுவாக்குகிறது.

அவதானம் ; அதிக அளவு எடுக்கும் போது அது வயிறு வலி, வீக்கம் போன்றவற்றை உண்டாக்கிவிடக்கூடும் என்பதால் அளவாக எடுத்துகொள்வது நல்லது.

​கொத்துமல்லி விதைகள் அல்லது தழைகள்

மாதவிடாய்க்கு முன்பு ஒரு வாரம் முதலிருந்து கொத்துமல்லி விதைகளை அல்லது தழைகள்ஒரு கப் நீரில் 10 கிராம் விதைகள் சேர்த்து தண்ணீர் பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிக்கவும்.
இது மாதவிடாய் காலத்தை தாமதமாக்கும். மேலும் இவை உடலில் இருக்கும் நச்சுக்களையும் வெளியேற்ற செய்கிறது.

கடுகு

மாதவிடாய் தினத்திற்கு ஒரு வாரம் முன்பிருந்தே இரவில் கடுகை இலேசாக வறுத்து பொடியாக்கி ஒரு கோப்பை பாலில் ஒரு டீஸ்பூன் கடுகுத்தூள் கலந்து குடித்து வந்தால் மாதவிடாய் தள்ளிபோகும் வாய்ப்புள்ளது.

உடற்பயிற்சி

மாதவிடாய்க்கு முந்தைய 10 நாட்களிலிருந்தே உடல் தீவிரமான உடற்பயிற்சியை மேற்கொண்டால் அது உங்கள் மூளைக்கு மெதுவாக சமிக்ஞையை கொண்டு செல்ல கூடும். ஏனெனில் தீவிரமான உடல்பயிற்சி மாதவிடாய் காலத்துக்கான செயல்களை தாமதப்படுத்துகிறது.

இதனாலையே விளையாட்டு வீரர்களும் தினசரி கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்பவர்களும் அவர்களது மாதவிடாய் காலத்தை பெரும்பாலும் தள்ளி அனுபவிப்பார்கள்.

இவ் குறிப்புகளை உங்கள் மாதவிடாய் காலத்துக்கு முந்தைய 10 நாட்களுக்கு தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் மாதவிடாய் நாளை ஒரு நாள் முதல் ஒருவாரம் வரை தள்ளிபோக செய்யலாம். இவ் குறிப்புகளை செய்யும் போது கார உணவுகளை தவிர்ப்பது சிறந்த பயனை தரும்.

Hot Topics

பிளாக் டீ, கிரீன் டீ இரண்டில் எது சிறந்தது?

உலகளவில் தண்ணீருக்கு பதிலாக குடிக்கும் இரண்டாவது பானம் தேநீர் தான். சாதாரணமாக அருந்தக்கூடிய தேநீரைக் காட்டிலும் பிளாக் டீ மற்றும் கிரீன் டீ யையே உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் அக்கறை கொண்டவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். எனினும்...

இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி?

இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கோவிட் -19   தொற்று உறுதியானதாக பிபிசி சிங்கள  செய்தி சேவை தெரிவித்துள்ளது இவருக்கு  விரைவான ஆன்டிஜென் பரிசோதனையில் இவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது இதனை  தொடர்ந்து இவருக்கு பி.சி.ஆர்...

‘டிக் டாக்’ யினால் பறி போன 10 வயது சிறுமியின் உயிர்!

டிக் டாக் செயலியில், 'பிளாக்அவுட்' சவாலை முயற்சித்த பத்து வயது சிறுமி ஒருவர் தற்செயலாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியை சேர்ந்த குறித்த சிறுமி டிக் டாகில் பிளாக்அவுட் சவாவுக்காக பெல்ட்டால் கழுத்தை...

Related Articles