உலகம்

தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு அதிகரிப்பு – முதல்வர் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி

தமிழ் நாட்டில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூபா.2,500 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஜனவரி 4 ஆம் திகதி முதல் இந்த பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ள முதல் அமைச்சர் பழனிசாமி, வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டு பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு உள்ளிட்ட பொருட்களும் இதனுடன் வழங்கப்பட உள்ளதாகவும் வழங்கப்படும் விபரங்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதன்மூலம் 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர் என்று தெரிவித்துள்ளார்.

வழக்கமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு உடன் 1,000 ரூபா வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த தொகை அதிகரிக்கப்பட்டுள்ளமை மக்களுக்கு பெறும் மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடை பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Hot Topics

Related Articles