உலகம்

கெப் ரக வாகனம் குளத்தில் வீழ்ந்து விபத்து – 02 மற்றும் 12 வயது சிறுவர்கள் உள்ளிட்ட மூவரை தேடும் பணி தீவிரம்

முல்லைத்தீவு – மல்லாவி பொலிஸ்பிரிவில் கெப் ரக வாகனம் ஒன்று வவுனிக்குளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காணாமல்போயுள்ளனர்.

இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ள இவ்சம்பவத்தில் 38 வயதுடைய வாகன சாரதியும் அவரின் இரண்டு வயது மகளும் 12 வயது சிறுவனும் இவ்வாறு மூழ்கி காணமல் போயுள்ளனர்.

வாகனத்தில் நான்கு பேர் மேலும் ஒரு சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் காணாமல்போனவர்களை மீட்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த கெப் ரக வாகன சாரதி அதிக வேகத்துடன் வாகனத்தை செலுத்திய நிலையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Hot Topics

Related Articles