உலகம்

இலங்கையில் கொரோனாவால் மேலும் 06 பேர் பலி! அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு தொற்றுறுதி!

நாட்டில் இன்று 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 06 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக இன்று இறந்தவர்களில் மூன்று பெண்களும் மூன்று ஆண்களும் அடங்குகின்றனர்.
உயிரிழந்தவர்களின் விபரம்,

கொழும்பு 14 இல் வசிக்கும் 39 வயது பெண் ஒருவர், குருதி விஷமானமை, பல உறுப்பு செயலிழப்பு மற்றும் நிமோனியா ஆகியவற்றால் உயிரிழந்துள்ளார்.

கிரிவத்துடுவாவை சேர்ந்த 88 வயதான பெண் நேற்று (18) வீட்டில் உயிரிழந்துள்ளார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொரோனாவால் ஏற்பட்ட ஆகியவற்றால் ஏற்பட்ட மாரடைப்பு இவரின் இறப்புக்கு காரணமாகும்.

பண்டாரகமையில் வசிக்கும் 83 வயது பெண் நேற்று (18) வீட்டில் உயிரிழந்துள்ளார். உயர் இரத்த அழுத்தம் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பு மற்றும் கொரோனா தொற்று ஆகியவை மரணத்திற்கு இறப்புக்கு காரணமாகும்.

வீரகுலவில் வசிக்கும் 68 வயது ஆண் ஒருவர் நேற்று (18) மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 15 ஐ சேர்ந்த 77 வயதுடைய ஆண் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் கொரோனாவால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் 17 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 10 ஐ சேர்ந்த 76 வயது ஆண் 17 ஆம் திகதி கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது இறந்தார். கொரோனாவால் ஏற்பட்ட நிமோனியா இவரின் மரணத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்று காரணாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 618 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இவர்கள் அனைவரும் மினுவங்கொடை – பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 36,667ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளன ஏழு வெளிநாட்டவர்கள் உட்பட 8,950 பேர் நாடளாவியரீதியல் உள்ள கொரோனா தொற்றுக்கான 63 சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று நாட்டில் மேலும் 491 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,552. ஆக உயர்வடைந்துள்ளது.

மேல் மாகாண எல்லைகளில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை ஒருவருக்கு தொற்றுறுதி!

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவோருக்கு மாகாண எல்லைகளில் இன்று 750 பேருக்க எழுமாராக மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை ஒருவருக்கு மட்டும் தொற்றுறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு!
நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3372 ஆக உயர்வடைந்துள்ளது.

இவர்களில் 114 சிறைச்சாலை அதிகாரிகளும், 3065 ஆண் கைதிகளும், 193 பெண்கைதிகளும் அடங்குகின்றனர்.

அத்துடன் வெளிகடை சிறைச்சாலையில் 800 பேரும், மெகசின் சிறைச்சாலையில் 796 பேரும், மஹர சிறைச்சாலையில் 658 பேரும் இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Hot Topics

Related Articles