பெண்களே ! மிரட்டும் ஆண்களை கண்டு அஞ்சாதீர்கள்!

டிஜிடல் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அனைத்து வசதிகளையும் எமது விரல் நுனியில் செயற்படுத்தி கொள்வது போன்று ஆபத்துகளையும் அதே கதியில் சந்திக்க நேரிடுகின்றது.

இணையத்தில் வர்த்தக ரீதியாக தகவல்களை திருடுவதன் மூலமும் ஏமாற்றும் ஒரு தரப்பு இருக்கும் நிலையில் பல பெண்களின் வாழ்க்கையை திருடுவதில் மற்றுமொறு தரப்பும் செயற்பட்டுவருகின்றது.

இவ்வாரான, செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பெண்களின் பயம் மிகப்பெரிய பலமாக உள்ளது.

முதலில் பெண்களின் நப்பிக்கையை உருவாக்கிக்கொண்டு, அதன் பின் அவரிடம் நெறுக்கமாக பழகி அவரின் அந்தரங்க விடயங்களை தமது சதி திட்டத்திற்கு ஆயுதமாக தயார் செய்து கொண்டு களத்தில் இறங்குகின்றனர் இவ்வாரான கயவர்கள்.

புகைப்படங்களை வைத்து மிரட்டுவது, பொதுதளத்தில் பகிர்ந்து உன்னை அசிங்கப்படுத்துவேன் போன்ற மிரட்டல்கள் மூலம் பெண்களை தமது வலையில் சிக்கவைக்கின்றனர்.

What Can Be Done to Effectively Combat Cyber Violence Against Women and Girls? - Center for International Private Enterprise

‘பெண்களை மிரட்டுவது வன்கொடுமைகளுக்கு சமமானது’ என்றும் சட்டத்தில் இருந்த போதும் பெண்களின் இவ் அச்சமும் மரியாதை குறைவாக எண்ணும் மனநிலையும் இழிவுபடுத்தும் சமூக கட்டமைப்பும் சட்டத்தை நாட தடையாக உள்ளது.

பொதுவாக ஒரு ஆண், பெண் இருவரிடமும் பரஸ்பர நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது, சமூகவலைத் தளங்களில் வெளியிடுவது, சில ரகசியமான விஷயங்களை அவர்களுக்குள் பகிர்ந்து கொள்வதாக இருக்கலாம்.

அதை அந்த உறவுக்கு பின்னால் வெளியே போய் இதை வைத்து மிரட்டுவது, பொதுதளத்தில் பகிர்ந்து உன்னை அசிங்கப்படுத்துவேன் போன்ற செயல்களில் ஒரு ஆண் ஈடுபடும்போது சமூகத்தின் குற்றச்சாட்டுக்கள் பெண் மீதே அதிகம் முன்வைக்கப்படுகின்றது.

அவமானம், இழிவுபடுத்தல் போன்றன பெண்களின் மனநிலையில் பெறும் தாக்கத்தை ஏற்படுத்துபவையாகதான் இன்றும் இருந்து வருகின்றது.

மிரட்டலுக்கு பணிந்துபோகக்கூடிய சமூகமாகத்தான் இன்றளவும் பெண்கள் இருக்கிறார்கள். மிரட்டப்படும் பெண் உண்மையில் அனுதாபத்துக்கு உரியவள் என்று எல்லோருக்கும் புரிந்திருந்தாலும் கூட அந்த பெண்ணை மட்டுமே தண்டிக்கக்கூடிய சமூக சூழலில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

House OKs bill expanding women, children protection vs cyber violence

உலக நாடுகள் டிஜிடல் உலகில் தனது செயற்பாடுகளில் ஈடுபட்ட போதும் இணைய வழியாக சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி செய்யப்படும் குற்றங்களுக்கான சட்டங்கள் இன்றும் பல நாடுகளில் இயற்றப்படவில்லை.

இது இணையவழி குற்றவாளிகளுக்கு இன்றும் பெரிய பலமாக இருந்து வருகின்றது.
இவ்வாறான சூழலின் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் தேவைப்படுகின்றது. ஒரு ஆண் வளர்ச்சியுடன் அவன் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களை விட ஒரு பெண் வளரும் பருவத்தில் அவள் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களின் தன்மை வேறுபட்டதாக இருக்கிறது.

எனினும் இவை இரண்டும் இயற்கையானதே, எனவே பெண்களின் உடலை அவமான சின்னமாக பார்க்கும் ஆண்களின் மனநிலையில் மாற்றம் தேவைபடுகின்றது. அத்துடன் தாம் தவறிழைக்காத பட்சத்தில் தைரியமாக முன்வந்து நம்மை இழிவுபடுத்துபவருக்கு தக்க தண்டனையை பெற்றுக்கொடுக்க பெண்கள் முன்வரவேண்டும்.

தனித்து பயந்து ஓடும் போது பின்னால் துரத்தும் நரிகள் கூட்டத்தை எதிர்த்து நிற்க ஒரு பெண் ஏனைய நம்பிக்கையானவர்களுடன் இணைந்து இதற்கு முகம் கொடுக்க வேண்டும்.

Proposals to combat gender-based violence and violence against children

ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவளின் நிர்வாணம் வெளியே வருகிறது என்றால் குடும்பம் அவளை தாங்கி பிடிக்கக்கூடிய தூணாக இருப்பதோடு, உடல் என்பது அவமான சின்னம் இல்லை என்பதை தெளிவுப்படுத்தவும் வேண்டும்.
ஒரு பெண்ணுக்கு இவ்வாறான நிலை ஏற்படும்போது ஏனைய பெண்கள் அவரை அமதிப்பதை விடுத்து அவர் பக்கம் உள்ள ஞாயத்தை உணர்ந்து குறல் கொடுக்க வேண்டும்.

ஏனெனில் பெண் என்பதால் சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு பெண்கள் அனைவரும் ஒரு நாள் பெண் என்பதால் முகம் கொடுக்க நேரிடலாம்.

இணையம் என்பது எப்போதும் இரகசியமான ஒரு தளம் அல்ல என்ற உண்மையை புரிந்து கொள்ளவேண்டும். எந்த சூழ்நிலையிலும் யாரை நம்பியும் உங்கள் அந்தரங்கங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம் உங்களின் பாதுகாப்பிற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பானவர்கள்.

உங்களை மீறி நடக்கும் மிரட்டல்களுக்கு இன்று குறல் கொடுக்க பல அமைப்புகள் இருக்கின்றன எனவே நீங்கள் எப்போதும் தனியாக இல்லை என்பதை உணர்ந்து இவ்வாறான இணையத்தள பாலியல் மிரட்டல்களுக்கு தைரியமாக பதிலடி கொடுக்க தயாராகுங்கள்.

சமூக ஊடகங்களில் பெண்களை இழிவுபடுத்தும் இவ்வாறான பதிவுகளை ஊக்குவிக்கும் முன்பு நமக்கு நெருக்கமான பெண்களை பற்றி ஒரு முறை சிந்திப்போமானால் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு நாமே பதிலடி கொடுக்கலாம்.

Hot Topics

பிளாக் டீ, கிரீன் டீ இரண்டில் எது சிறந்தது?

உலகளவில் தண்ணீருக்கு பதிலாக குடிக்கும் இரண்டாவது பானம் தேநீர் தான். சாதாரணமாக அருந்தக்கூடிய தேநீரைக் காட்டிலும் பிளாக் டீ மற்றும் கிரீன் டீ யையே உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் அக்கறை கொண்டவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். எனினும்...

இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி?

இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கோவிட் -19   தொற்று உறுதியானதாக பிபிசி சிங்கள  செய்தி சேவை தெரிவித்துள்ளது இவருக்கு  விரைவான ஆன்டிஜென் பரிசோதனையில் இவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது இதனை  தொடர்ந்து இவருக்கு பி.சி.ஆர்...

‘டிக் டாக்’ யினால் பறி போன 10 வயது சிறுமியின் உயிர்!

டிக் டாக் செயலியில், 'பிளாக்அவுட்' சவாலை முயற்சித்த பத்து வயது சிறுமி ஒருவர் தற்செயலாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியை சேர்ந்த குறித்த சிறுமி டிக் டாகில் பிளாக்அவுட் சவாவுக்காக பெல்ட்டால் கழுத்தை...

Related Articles

பிளாக் டீ, கிரீன் டீ இரண்டில் எது சிறந்தது?

உலகளவில் தண்ணீருக்கு பதிலாக குடிக்கும் இரண்டாவது பானம் தேநீர் தான். சாதாரணமாக அருந்தக்கூடிய தேநீரைக் காட்டிலும் பிளாக் டீ மற்றும் கிரீன் டீ யையே உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் அக்கறை கொண்டவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். எனினும்...

இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி?

இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கோவிட் -19   தொற்று உறுதியானதாக பிபிசி சிங்கள  செய்தி சேவை தெரிவித்துள்ளது இவருக்கு  விரைவான ஆன்டிஜென் பரிசோதனையில் இவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது இதனை  தொடர்ந்து இவருக்கு பி.சி.ஆர்...

‘டிக் டாக்’ யினால் பறி போன 10 வயது சிறுமியின் உயிர்!

டிக் டாக் செயலியில், 'பிளாக்அவுட்' சவாலை முயற்சித்த பத்து வயது சிறுமி ஒருவர் தற்செயலாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியை சேர்ந்த குறித்த சிறுமி டிக் டாகில் பிளாக்அவுட் சவாவுக்காக பெல்ட்டால் கழுத்தை...