உலகம்

பிறக்கும் குழந்தைகளுக்கு கொரோனாவுக்கான எதிர்ப்பு சக்தி இருக்கலாம்- ஆய்வில் இந்த தகவல்

கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணிப் பெண்களுக்கு பிறந்க்கும் குழந்தைகளுக்கு கொரோனாவுக்கான நோய்எதிர்ப்பு சக்தி இருக்கலாம், என சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் பல்கலைக்கழக மருத்துவமனைகளான (NUH) மற்றும் KKH ஆகியன இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் அவை கோரோனா தொற்றிலிருந்து முழுமையாக பாதுகாப்பளிக்கின்றதா என்பது தெளிவாக தெரியவில்லை என ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

Infants born to mothers with COVID-19 may catch infection: Study | Infants News – India TV

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஆன்டிபாடிகள் தாயிடமிருந்து அனுப்பப்பட்டதா அல்லது குழந்தையே உருவாக்கிகொண்டதா என்பது தொடர்பில் ஆய்வுகள் செய்யப்பட்டுவருகின்றது.

இதே போன்று சீனாவின் வுஹானில், வளர்ந்து வரும் தொற்று நோய்கள் என்ற இதழில் அக்டோபரில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், கொரோனா தொற்றுக்குள்ளான பெண்களுக்கு பிறந்த 11 குழந்தைகளில், அனைவருக்கும் பிறக்கும்போதே கண்டறியக்கூடிய அளவிலான ஐ.ஜி.ஜி ஆன்டிபாடிகள் இருந்தன, ஐந்து பேருக்கு கண்டறியக்கூடிய ஐ.ஜி.எம் ஆன்டிபாடிகள் இருந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Asia virus latest: Bangkok hospitals protect babies with face shieldsஐ.ஜி.எம் என்பது தொற்றுநோய்க்கு விடையிறுப்பாக உற்பத்தி செய்யப்படும் ஆரம்ப ஆன்டிபாடி. இருப்பினும், இது பொதுவாக நஞ்சுக்கொடியின் வழியாக தாயிடமிருந்து கருவுக்கு மாற்றப்படுவதில்லை, ஆனால் சிறிய ஐ.ஜி.ஜி ஆன்டிபாடிகள் நஞ்சுக்கொடியின் மூலம் தாயிடமிருந்து கருவுக்கு செயலற்ற முறையில் மாற்றப்படலாம் என்று அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாய்வழி ஐ.ஜி.ஜி ஆன்டிபாடிகளிலிருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பளிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியின் காலம் குறித்து தெளிவான முடிவுகள் இன்னும் அறியப்படவில்லை என ஆய்வுகளை மேற்கொண்ட மருத்துவமனைகள் தெரிவிக்கின்றன.

Hot Topics

Related Articles