உலகம்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட சிறுவர்கள் விடுவிக்கப்பட்டதாக தகவல்!

வடமேற்கு நைஜீரியாவில் உள்ள பாடசாலையிலிருந்து கடந்த 11 ஆம் திகதி போகோ ஹராம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 300க்கும் மேற்பட்ட சிறுவர்கள் நேற்று வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளதாக கட்சினா மாநில ஆளுநர் தெரிவித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் கடத்தப்பட்ட சில சிறுவர்களை காணவில்லை என்று ஆளுநர் அமினு பெல்லோ மசாரி அரச தொலைக்காட்சியில் தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
“நாங்கள் பெரும்பாலான சிறுவர்களை மீட்டுள்ளோம், அது அவர்கள் அனைவருமே அல்ல” என்று அவர் மாநில தொலைக்காட்சியில் கூறியுள்ளார்.

விடுவிக்கப்பட்ட சிறுவர்கள் அண்டை நாடான ஜம்பாரா மாநிலத்தில் ஒரு காட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை கிராமப்புற கங்காராவில் உள்ள ஒரு பள்ளி மீது நடத்தப்பட்ட சோதனையில், பல ஆண்டுகளாக இப்பகுதியை அச்சுறுத்திய குற்றவாளிகள் மீது முதலில் குற்றம் சாட்டப்பட்டது.

Military men walk inside the Government Science school in Kankara, in northwestern Katsina state, Nigeria, Dec. 13, 2020.
ஆனால் போகோ ஹராம் பயங்கரவாத குழு பின்னர் இவ் கடத்தலுக்கு பொறுப்பேற்றது.

இதேவேளை, குறித்த அமைப்பு வியாழக்கிழமை சிறுவர்கள் பேசும் ஒரு காணொளியை வெளியிட்டு சிறிது நேரத்திலேயே இந்த செய்தியும் வந்துள்ளது, இந்த காணொளி பதிவு போகோ ஹராம் போராளிக்குழுவினால் கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான நைஜீரிய பள்ளி மாணவர்களில் சிலர் காணப்பட்டதாக செய்திகள் தெரிக்கின்றன.

சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட இந்த காணொளியில் பேசிய சிறுவர்கள் குழு, ஒரு காட்டுப்பகுதியில் உள்ள பாதுகாப்புப் படையினரை அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டனர்.

Boko Haram terror chief Abubakar Shekau claimed responsibility for the attack on Tuesday - he released a further audio clip today as they released footage of the boys
இத்துடன் அதில் பேசிய வளர்ந்த சிறுவன் சூழப்பம் அடைந்தும் கவலையுடனும் காணப்பட்டான் அத்துடன் அவர் “அபு ஷெகாவின் கும்பல்” கடத்தப்பட்ட 520 மாணவர்களில் ஒருவர் என்று கூறினார்.

லாபரனின் அறிக்கையும் அந்த காணொளி உண்மையானது என்று கூறியது, ஆனால் குழுவின் தலைவர் பொய்யானவரை் என தெரிவிக்கப்பட்டது.

The distraught teenager in the video released by Boko Haram on Thursday. Surrounded by dozens of younger boys, he speaks in English and Hausa saying: 'We have been caught by the gang of Abu Shekau'
வீடியோ வெளியானது குறித்து நைஜீரிய அரசாங்கம் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

2014 ஆம் ஆண்டில், போகோ ஹராம் பயங்கரவாத குழு வடகிழக்கு நைஜீரிய நகரமான சிபோக்கிலிருந்து 270 க்கும் மேற்பட்ட சிறுமிகளைக் கடத்தியது. எனினும் கடத்தப்பட்ட பெண்கள் இதுவரை மீட்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://

Hot Topics

Related Articles