உலகம்

நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்தும் SLCPI

நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு (Anitibiotic Resistance): ஏற்றுக் கொள்ளக்கூடிய நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்தும் SLCPI

நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பின் பரவலை (Anitimicrobial Resistance (AMR)) கட்டுப்படுத்துவதற்காக மருந்து விற்பனை குறித்து நெறிமுறையொன்றை  உருவாக்குதல் மற்றும் மருத்துவ அனுமதியின் பின்னர் வழங்கப்பட்ட பெரும்பாலான மருந்து குறிப்புத்தாளுக்கு அமைய மருந்துகளை விநியோகித்தல் மற்றும் மருந்துப் பயன்பாடுகள் குறித்தும் அறிவுறுத்துவதற்காக தமது சம்மேளனம் அர்ப்பணிப்புடன் செயற்படுமென இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் (SLCPI) தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் ‘World Antimicrobial Awareness Week’ எனும் சர்வதே நுண்ணுயிர் கொல்லி குறித்து அறிவுறுத்தும் முகமாக அந்த வாரம் கொண்டாடப்படுகிறது.

இதற்கு சமாந்திரமாக உலகளாவிய ரீதியில் நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு (AMR) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் மற்றும் நுண்ணுயிர் கொல்லி தொற்று மேலும் ஏற்படுதல் மற்றும் பரவாமல் தடுப்பதற்காக எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் மக்கள், மருத்துவர்கள், சுகாதார பிரிவு ஊழியர்கள் மற்றும் மருந்து தொடர்பிலான கொள்கை வகுப்பாளர்களுக்கும் தெளிவுபடுத்தும் நோக்கில் சம்மேளனம் இதுதொடர்பில் கருத்துக்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது முதலாவது நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து என்பது என்னவென்று ஆராயவேண்டியது அவசியம். அதன்படி நுண்ணுயிர் எதிர்ப்பு எனும் பெக்றீரியா , திரவ மற்றும் சில ஒட்டுண்ணிகளினால் பரவக்கூடிய நோய்கள் உள்ளிட்ட தொற்றுங்கள் (Infections) தொடர்பில் சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் பிரபலமான மருந்து வகையாகும்.

பொதுவாக நுண்ணுயிர் கொல்லி மருந்துகளின் மூலம் பற்றீரியாவை அழித்தல் அல்லது அதன் முன்னேற்றத்தை தடுத்தல் ஆகியவற்றையே மேற்கொள்ளப்படும்.

எனினும் SLCPI குறிப்பிடும் விதமாக நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை அதிகமாக பயன்படுத்துதல் மற்றும் சரியான முறையில் பயன்படுத்தாமல் போனால் உடலுக்கு தீங்கை ஏற்படுத்துவதோடு அதன் மூலம் நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு (Antimicrobial Resistance) அதிகரிக்கும்.

அவ்வாறு ஏற்படுவது பற்றீரியா தொற்றுக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் பக்றீரியாக்களை எதிர்ப்பதனால் ஆகும்.

பக்றீரியா மாற்றமடைதல் மற்றும் அதன் எதிர்ப்பின் மாற்றங்களுடன் கூய பக்றீரியா கூட்டாக பரவுவதற்கு பிரதான காரணம் நுண்ணுயிர் எதிர்ப்பு முறையற்ற வித்ததில் பயன்படுத்துவதனால் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுகவீனமாகும் போது தாம் நினைத்தபடி மருந்களை பெற்றுக் கொள்ளுதல் மற்றும் மருந்தாளர்களுக்கிடையில் மருந்து தொடர்பான போதுமான அறிவு இல்லாமல் இருத்தல் இலங்கையில் தற்போது AMRகளுக்கு பிரதான விடயமாக அமைந்துள்ளதாக மருந்தாக்கல் சம்மேளனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையினால் தற்போது மனித வர்க்கம் எதிர்கொள்ளும் பத்து பாரிய உலகளாவிய சுகாதார பிரச்சினைகளில் ஒன்றாக நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு (Antimicrobial Resistance) அறிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் AMR காரணமாக 700,000 உயிரிழப்புக்கள் இடம்பெறுகின்றன.

இதிலுள்ள பாரதூரமான விடயம் என்னவென்றால், இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காவிடின் AMR பரவுவதனால் 2050 ஆகும் போது வருடம் ஒன்றுக்கு ஒருகோடிக்கும் அதிகமான உயிர்கள் காவுகொள்ளப்படுமென சபையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் அபிவிருத்தியடைந்து வரும் ஆசிய நாடுகளில் AMRஇனால் அதிகமானோர் பாதிப்பிற்குள்ளாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நுண்ணுயிரியல் குறித்து இலங்கை மருத்துவர் சங்கத்தின் (Sri Lanka College of Microbiologists) தகல்களுக்கு அமைய உயிருக்கு அச்சுறுத்தலாகவுள்ள இரத்தம் சம்பந்தமான நோய்த் தொற்றுக்களை ஏற்படுத்தக்கூடிய S. Aureus (MRSA) மற்றும் S. Pneumoniae போன்ற பக்றீரியா விசேடமாக முதல் நிலை நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகளுக்காக முறையே 53% மற்றும் 95%க்கு எதிர்ப்பினை காட்டக்கூடியது. இதேவேளை குறுதி, சிறுநீர் வழியாக மற்றும் நுரையீரல் போன்ற தொற்றுக்களுக்கு காரணமான நோய்களுக்கு ஏதுவான Acinetobacter பக்றீரியா இரண்டாம் நிலை நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகளுக்காக 38%க்கு எதிர்ப்பினை ஏற்படுத்தும்.

நுண்ணுயிர் கொள்ளி எதிர்ப்பிகள் அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை காட்டும் வகையில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் மருந்துகளை விநியோகிப்பதற்காக நெறிமுறையொன்றை உருவாக்குதல் மற்றும் தகைமையுடைய மருத்துவர் ஒருவரின் பரிந்துதுரையுடன் கூடிய மருந்துகளை விநியோகித்தல் போன்ற நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு SLCPI பங்களிப்பு செய்கிறது. அது AMRஐ தவிர்ப்பதற்கும் மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும்.

“நோயாளியின் உடல் ஆரோக்கியம் மற்றும் சிறந்த நிலையை உறுதிப்படுத்துவதற்காக எமது துறையின் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த தரத்துடன் நெறிமுறையை பேணுவதற்கான தேவையை துறையில் முன்னிலையிலுள்ள நிறுவனமாக நாம் அடையாளம் கண்டுள்ளோம்.” என SLCPIஇன் உப தலைவர் அஸாம் நிஸாம் ஜாவர்ட் தெரிவித்துள்ளார்.

“இதன்படி நுண்ணுயிர் கொள்ளி எதிர்ப்பை தவிர்ப்பதற்கு உடனடி நடவடிக்கையொன்று அவசியமென்பது தெளிவாகவுள்ளது. இதனை நாம் உறுதி செய்வதற்கு ஒரு வழி, மருத்துவர்களுக்கு, சுகாதார ஊழியர்கள் மற்றும் நோயாளர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்துகளை அளவோடு பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்துவதற்காக அரசு மற்றும் உரிய தரப்பினருடன் ஒத்துழைப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Hot Topics

Related Articles