உலகம்

இலங்கையில் வெவ்வேறு வாகன விபத்துகளால் ஒரே நாளில் 10 பேர் பலி! இன்று முதல் சிறப்பு நடவடிக்கை

இலங்கையில் வெவ்வேறு பதிவான வாகன விபத்துக்கள் காரணமாக நேற்று மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளதாக போலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் (டி.ஐ.ஜி) அஜித் ரோஹானா தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 7 பேர் நேற்று இடம்பெற்ற வீதி விபத்துக்களினாலும் மேலும் மூவர் நேற்று முன்தினம் (16) ஏற்பட்ட விபத்துக்களில் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முன்னர் ஒரு நாளைக்கு 10 அபாயகரமான விபத்துக்கள் பதிவாகியுள்ள நிலையில் நாட்டில் மீண்டும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் எச்சரித்துள்ளார்.

வரவிருக்கும் பண்டிகை காலங்களில் குடிபோதையில் மற்றும் பொறுப்பற்ற வாகன ஓட்டுநர்களை கைது செய்ய இன்று முதல் சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.

Hot Topics

Related Articles