உலகம்

ஃபைசரின் தடுப்பூசியை பெற்றுக்கொண்டதன் பின் மயக்கமடைந்த அமெரிக்க தாதி

அமெரிக்காவின் டென்னசி, சட்டனூகாவில் உள்ள சிஎச்ஐ மெமோரியல் வைத்தியசாலையில் ஃபைசரின் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட ஒரு தாதி 17 நிமிடங்களுக்குப் பிறகு மயக்கமடைந்துள்ளார்.

Nurse Tiffany Dover was among the first nurses in Chattanooga, Tennessee, to receive the vaccine on Thursday
அவர் தடுப்பூசியை பெற்றக்கொண்டமை நேரலையாக ஒளிபரப்பப்பட்ட நிலையில் சுகாதாரப் பணியாளர்கள் அதைப் பெறுவது ஏன் முக்கியம் என்று தொலைக்காட்சியில் பேசிக்கொண்டு இருக்கும் போதே மயக்கமடைந்துள்ளார்.

எனினும், டோவர் பின்னர் தனக்கு வலியை உணரும்போது மயக்கம் ஏற்படுவது வளமையானது என்று தெரிவித்துள்ளார்.

Dover was giving an interview to a local news outlet when she started to feel dizzy
தடுப்பூசி குறித்து தனக்கு சந்தேகம் இல்லை அல்லது பக்கவிளைவுகளைப் பற்றி கவலைப்படவில்லை என்று மேலும் தெரிவித்துள்ளார்.

தாதியர் மேலாளரான டிஃப்பனி போண்டஸ் டோவர் வியாழக்கிழமை தடுப்பூசி பெற்ற முதல் ஊழியர்களில் ஒருவர்.

சி.எச்.ஐ மெமோரியல் வைத்தியசாலையில் பணிபுரியும் 30 வயதான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

 

Hot Topics

Related Articles