உலகம்

55 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிலிருந்து வங்காளதேசத்திற்கு இரயில் சேவை ஆரம்பம்!

55 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா – வங்காளதேசம் இடையேயான ரயில் சேவை இன்று இந்திய பிரதமர் நரேந்திர மேடியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவும், வங்காள தேசமும் உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்தி வருகின்ற நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, வங்காளதேச நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா ஆகியோருக்கு இடையிலான உச்சி மாநாடு மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் இன்று நடைபெற்றது.

இதில் ஒரு அங்கமாக ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து சிலாஹதியில் இருந்து ஹால்திபரி வரை சரக்கு ரயில் இயக்கப்படுகிறது. ஹால்திபரி, வடகிழக்கு ரயில்வேயின் கதிஹார் கோட்டத்தில் உள்ள முக்கியமான ரயில்நிலையம் ஆகும்.

இந்தியாவிற்கும் அப்போதைய கிழக்கு-பாகிஸ்தானுக்கும் இடையிலான ரயில் தொடர்புகள் முறிந்த பின்னர், ஹல்திபரி (மேற்கு வங்கம்) முதல் சிலாதி (பங்களாதேஷ்) வரையிலான ரயில் சேவைகள் 1965 முதல் இடைநிறுத்தப்பட்டது.

ரயில் சேவை ஆரம்பிக்கப்பட உள்ளமை வர்த்தகத்தை அதிகரிக்கவும், எல்லை தாண்டிய ரயில் இணைப்பிற்கும் உதவும். தவிர, 75 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த பாதை நாட்டின் பிற பகுதிகளை ஒருங்கிணைக்க உதவும்

இருதரப்பு உறவுகள், குறிப்பாக கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் இரண்டு தலைவர்களும் இவ் மாநாட்டில் விரிவாக விவாதித்திருத்தமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles