உலகம்

10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சஹார் தபர் பிணையில் விடுதலை!

ஏஞ்சலினா ஜோலியாக தன்னை மாற்றக் கொள்ள நினைத்த சஹார் தபருக்கு சில நாட்களுக்கு முன்பு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Sahar Tabar, 19 (left), an Iranian Instagram star famous for posting heavily-doctored images of herself looking like Zombie Angelina Jolie online (right), has been freed from jail
ஈரான் நாட்டை சேர்ந்த சஹார் தபர் என்ற 19 வயது இளம் பெண், தன்னை ஏஞ்சலினா ஜோலி போல மாற்றிக்கொள்ள அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால், அவரது முகம் கோரமாகச் சிதைந்தது.

இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் முன்னரே வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

The social media star, whose real name is Fatemeh Khishvand, from Tehran, shot to prominence after posting images of her eerily gaunt face.
எனினும், அவர் தன்னை எப்படியாவது, ஏஞ்சலினா ஜோலி போல் போட்டோசாப் மூலமும், ஒப்பனை மூலமும் முகத்தை மாற்றி, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு பிரபலமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து அவரை இன்ஸ்டாகிராமில் 4 லட்சத்திற்கு அதிகமானோர் பின்தொடரத் தொடங்கினர்.

Charges against Tabar included blasphemy, inciting violence, gaining income through inappropriate means and encouraging youths to corruption
இந்நிலையில், சஹார் தபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அவர் மீது ஊழலை ஊக்குவித்ததாக வழங்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையில், சில நாட்களுக்கு முன்பு அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சஹார் தபரை மீட்கப் போராடும் அவரது தாயார், தனது மகளுக்காக ஏஞ்சலினா ஜோலி குரல் கொடுக்க வேண்டும் என வேண்டு கோள் விடுத்திருந்த நிலையில், தாபரின் சிறைவாசத்தை முதலில் முறியடித்த அமெரிக்காவைச் சேர்ந்த ஈரானிய ஆர்வலர் மாசிஹ் அலினேஜாட், ‘பாரிய ஊடக அழுத்தத்திற்கு’ பின்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Hot Topics

Related Articles