முப்பரிமாண பிரதியெடுத்தல் முறையில் சார்ஜாவில் கட்டப்பட்ட முதல் வீடு!

கட்டுமான தொழில்நுட்பங்களில் நவீனமான வடிவமான 3 D கட்டிடக்கலை முறையில் சார்ஜாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் உதவியுடன் சார்ஜா ஆராய்ச்சி தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு பூங்காவில் வீடு ஒன்று கட்டப்பட்டுள்ளது.

3 D முறையில் கட்டிட அமைப்புகள் கணிணியின் உதவியுடன் உருவாக்கப்படுகின்றன.

இந்த முறையை கையாண்டு நமக்கு தேவைப்படும் விதத்தில் முப்பரிமாண முறையில் தேவையான எந்த ஒரு பிரமாண்டமான அமைப்பையும் உருவாக்கிவிட முடியும். இதற்கு முன் உலகில் பல கட்டிடங்கள் இவ்வாறு உருவாக்கபட்டுள்ள நிலையில்  சார்ஜாவில் முதல் தடவையாக ஒரு வீ டு உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு கணினியில் கட்டிடத்தின் 3 D வரைபடம் வடிவமைக்கப்பட்டு, அதில் கட்டிடப் பணிகளை செய்வதற்கான பிரத்தியேக 3 D பிரிண்டிங் இயந்திரமு இணைக்கப்பட்டிருக்கும்.

அந்த எந்திரம் இயங்கும்போது கட்டிடத்தின் 3 D வரைபடத்துக்கு ஏற்ப கம்பி, சீமெந்து கலவை ஆகியவற்றை தானாக எடுத்துக்கொண்டு, அந்த எந்திரம் வீட்டை தாமாகவே வடிவமைத்துக் கொள்கிறது.

இந்த தொழில்நுட்பத்தில் பிசின் போன்ற ரசாயன கலவைகள் அடங்கிய ‘அட்மிக்ஸர்கள்’ எனப்படும் பொருள் கலந்து சீமெந்து குழைக்கப்படுகிறது. இந்த கலவையில் தகுந்த இடங்களில் ஒக்ஸிஜனை படிப்படியாக செலுத்துவதன் மூலம் அதை திட வடிவத்திற்கு மெல்லமெல்ல மாறும்படி செய்கின்றது 3 D பிரிண்டிங் இயந்திரம்.

சீமெந்து கலவை, இரும்புக் கம்பிகள் போன்றவற்றை கையாளும் அபிஸ் கோர் 3 D என்ற இயந்திரம் 360 பாகை கோணத்தில் முழு வட்டமாக இயங்கும் திறன் கொண்டது.

இது வீடு கட்டும் இடத்தில் வைக்கப்பட்டு அதன் மூலம் சீமெந்து கலவை குழாய் மூலம் செலுத்தப்படுகிறது. அதில் உள்ள பெரிய ‘சிரிஞ்ச்’ போன்ற அமைப்பு வேகமாக சுவர்களை உருவாக்க ஆரம்பிக்கிறது.

கணினியின் வரைபடத்தின்படி வீட்டின் சுவர்கள் அமைக்கப்படுகின்றன. இந்த கட்டிடங்களுக்கு ஆகும் செலவு மிகவும் குறைவானதாகும்.

சார்ஜாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் பின்லாந்து, சுவிட்சர்லாந்து நாட்டின் பல்கலைக்கழகங்கள் ஆதரவில் இந்த வீடு அமைக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்ற முப்பரிமாண பிரதியெடுத்தல் தொழில்நுட்பத்தில் அமையும் கட்டிடங்கள் அதிகமாக இருக்கும் என அந்த தொழில்நுட்ப பூங்காவின் தலைமை செயல் அதிகாரி ஹுசைன் அல் மஹ்மவுதி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இதே தொழில்நுட்பத்தில் துபாயில் மாநகராட்சி சார்பில் பிரமாண்ட அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது.
இதற்கு முன்னதாக 3 D அல்லது முப்பரிமாண பிரதியெடுக்கும் முறையில் சிறு பொருட்கள், உடல் உறுப்புகள், கை, கால் எலும்புகள், பாதிக்கப்பட்ட பாகங்கள், எந்திர உதிரி பாகங்கள் இப்படி ஏராளமான வகையில் பொருட்களை தயாரித்து சாதனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

இன்று முதல் இலங்கையில் விமான நிலையங்கள் மீள திறப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் இன்று முதல் மீள திறக்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் மார்ச் மாதம் 19 ஆம்  திகதி சுற்றுலா பயணிகளின் வருகைக்கு...

பருவகாலத்தின் மகிழ்ச்சியை பரப்பும் Pelwatte Dairy இன் பண்டிகைக்கால பிரசாரம்

Pelwatte Dairy Industries, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு பருவகால மகிழ்ச்சியை அளிப்பதற்காக, ‘Pelwatte உடன் பருவகால மகிழ்ச்சியைப் பரப்புங்கள்’ என்ற பேஸ்புக் பிரசாரத்தைத் தொடங்கியது. 2020 டிசம்பர் 01 முதல்...

Invite prosperity this Thai Pongal with NDB Wealth

Expert financial planner NDB Wealth invites everyone to herald bountiful prosperity this Thai Pongal, celebrating the joy and abundance of the first harvest of...

Related Articles