உலகம்

கிறீன் ஏஞ்சல்ஸ் மற்றும் கிறீன் ஏஞ்சல்ஸ் மற்றும் BDC “ஆன்லைன் ஆங்கிலக் கற்கை நெறி”யை அறிமுகம் செய்கிறது

கிறீன் ஏஞ்சல்ஸ் சர்வதேச பாடசாலையுடன் இணைந்து பிஸ்னஸ் டிவலொப்மென்ட் சென்டர் (தனியார்) கம்பனி (BDC) எமது நாட்டிலுள்ள மாணவர்களின் ஆங்கில மொழி அறிவை விருத்தி செய்யும் பொருட்டு புதிய எண்ணக்கருவான மொழி மைய கற்கை நெறி (Language Hub Programme) ஒன்றை அறிமுகம் செய்கிறது.

இலங்கையின் எதிர் கால சந்ததியினர் மத்தியில் ஆங்கில மொழி அறிவை விருத்தி செய்வதற்கான அடிப்படையை நிறுவுதல் இந்த மொழி மைய கற்கை நெறியின் நோக்கமாகும். ஒருவர் புதிதாக ஒரு மொழியைக் கற்பதற்கு உகந்த வயது 10 என்பதை பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

 

ஆகவே பேச்சு, வாசித்தல், எழுதுதல் மற்றும் செவிமடுத்தல் போன்ற ஆற்றல்களில் கவனம் செலுத்தி, ஆரம்பக் கல்வி பெறும் மாணவர்களுக்கு ஆங்கில மொழிக் கல்வியையும் பயிற்சியையும் வழங்குதல் மற்றும் அவர்களின் திறன்களை விருத்தி செய்தல் என்பன மொழி மைய கற்கை நெறியின் குறிக்கோளாகும்.

மொழி மைய கற்கை நெறியின் மூலம் 05 ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றி பெறுபேறுகளை எதிர்பார்த்துள்ள மாணவர்களுக்கு மூன்று மாத கால கற்கை நெறியின் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுகின்றது. புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மட்டுமன்றி 9-12 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களும் இந்த கற்கை நெறியில் இணைந்து கொள்ள முடியும்.

மாணவர்கள் மொழி மைய கற்கை நெறியை நிறைவு செய்த பின்னர் அவர்களது எதிர்காலத்திற்கும் பயனுள்ளதாக அமையும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் இணைந்து கொள்வதற்கு விசேட வழிமுறை காணப்படுவதோடு அதனூடாக மொழி பயன்பாடு மற்றும் சொல்வளம் விரிவுபடுத்தப்பட்டு ஆற்றல் மேம்படுத்தப்படும்.

மூன்று மாதங்களைக் கொண்ட இந்த கற்கை நெறியின் பாடத்திட்டம் மிகவும் கவர்ச்சிகரமானதாக, பல்வேறு பாடநூல்கள் மற்றும் வளங்களை உள்ளடக்கியதாக காணப்படும்.

பேச்சு, உச்சரிப்பு மற்றும் பாத்திரம் ஏற்றல் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய 50 மணித்தியாலங்களை கொண்டதாக இது அமையும். வாரத்தில் தலா 02 மணித்தியாலங்களைக் கொண்ட இரண்டு வகுப்புகள் நடைபெறும். அனுபவம் வாய்ந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆசிரியர்கள் நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்துள்ளனர்.

ஆசிரியர்களால் வகுப்பறை கற்றல் நடவடிக்கைகள், வீட்டு வேலை மற்றும் பரிட்சை என்பனவற்றின் மூலம் பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். கற்கை நெறியின் முடிவில் மாணவர்களுக்கு தமது பேச்சு, வாசிப்பு மற்றும் எழுத்தாற்றலில் நம்பிக்கை ஏற்படுவதுடன் அவர்களின் சிந்தனா சக்தியும் மேம்படும்.

மேலும் அவர்கள் ஆங்கில மொழியைக் கற்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாகக் காணப்படுவர். இந்த மொழி மைய கற்கை நெறியின் மூலம் பாரம்பரிய கற்றல் வழி முறைகள் தொடர்பில் மட்டும் கவனம் செலுத்தாது செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட செயல்திட்டங்கள், செய்முறை மற்றும் மாணவர் மையக் கற்றல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும். அதற்கு மேலதிகமாக பெற்றோர் தம் பிள்ளைகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யக் கூடிய வகையில் பெற்றோருடன் தொடர்பினை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளும் இதில் அடங்கும்.

இந்த மொழி மைய கற்கை நெறியினை நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட கல்வி நிலையங்களில் நடத்த ஏற்கனவே தீர்மானிக்கப்;பட்டிருந்தது. எனினும், கோவிட் 19 தொற்று பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சி திட்டம் ஆன்லைன் வழியாக முன்னெடுக்கப்படும்.

அறிவு, திறமை மற்றும் அனுபவம் வாய்ந்த சேவை வழங்குனர்களான நாம் 2020 நவம்பர் மாதம் தொடக்கம் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என்பதை உங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். இதற்காக அனைத்து பெற்றோர் மற்றும் மாணவர்களை அன்புடன் அழைக்கின்றோம். இந்த கற்கை நெறி தொடர்பில் ஆர்வமுள்ளவர்கள்

பின்வரும் இலக்கங்கள் வாயிலாக தொடர்பினை ஏற்படுத்துவதன் மூலம் மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். – +94 70 655 2552 | +94 70 655 3553 எமது languagehublk@gmail.com மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்பினை ஏற்படுத்தலாம்.

முகநூல் – https://www.facebook.com/LanguageHubSL
யூரிவூப் – https://www.facebook.com/LanguageHubSL

Hot Topics

Related Articles