உலகம்

அமெரிக்காவில் ஒரே நாளில் அதிக பனி பொழிவு! ஆயிரத்திற்கும் மேற்பட்ட விபத்துக்கள் பதிவு

அமெரிக்காவில் புதன்கிழமை ஒரே நாளில் அதிக பனி பொழிவு இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

MEDFORD, MASSACHUSSETTS: Tow truck crews help push out a driver stuck at an intersection in Medford, just north of Boston
கடந்த ஆண்டு குளிர்காலம் முழுவதையும் விட புதன்கிழமை நியூயார்க் நகரில் ஒரே நாளில் அதிக பனி பொழிவு ஏற்பட்டுள்ளதுடன் அமெரிக்காவை தாக்கிய கெயில் புயல் காரணமாக கிழக்கு மாநிலங்களில் சாலைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

PITTSBURGH, PENNSYLVANIA: The driver and ambulance crews looked on in terror as the car hurtled toward them and was unable to stop, causing them to leap out of its path
வடக்கு வர்ஜீனியாவிலிருந்து நியூயார்க் நகரம் முதல் தெற்கு மைனே வரை புதன்கிழமை இரவு ஏற்பட்ட பனி பொழிவு காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து விபத்துக்களில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

STAMFORD, CONNECTICUT: Cars blanketed after receiving up to a foot of snow in Stamford overnight
நியூயார்க் மாநிலத்தில் இரவு முழுவதும் 500 க்கும் மேற்பட்ட விபத்துக்கள் பதிவாகியுள்ளன, இதில் நியூயார்க் நகரில் 27 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

KENNEBUNKPORT, MAINE: Snowfall records have been smashed across several regions of the East Coast
வர்ஜீனியாவில் 200 க்கும் மேற்பட்ட விபத்துகளும், வியாழக்கிழமை அதிகாலை மேரிலாந்தில் 350 க்கும் மேற்பட்ட விபத்துக்களும் பதிவாகியுள்ளன.

MANHATTAN, NEW YORK CITY: A mountain of snow is piled up in the roadway after being cleared from the sidewalks
இவ் பனி பொழிவு சில இடங்களில் இரண்டு 2 அடி வரை காணப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமெரிக்காவின் 14 மாநிலங்களை சேர்ந்த 60 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

KENNEBUNKPORT, MAINE: A winter storm warning is in effect for York County and most of Cumberland County through late Thursday afternoon, where most of the snow is expected to fall
இந்நிலையில், குடியிருப்பாளர்களை வீட்டிலேயே இருக்குமாறு அதிகரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

MANHATTAN, NEW YORK CITY: A tractor with a power brush clears snow from Times Square Thursday morning

கடந்த ஆண்டு குளிர்காலம் முழுவதும் 4.8 அங்குலங்கள் பனி பொழிவு இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்தவருடம் நியூயார்க்கர்கிள் நேற்றைய தினம் 10 அங்குலங்கள் வரை பனிபொழிவு பதிவாகியுள்ளது.

http://

2016 இல் சென்ட்ரல் பூங்காவில் 27.5 அங்குலம் வரை பனிபொழிவு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Hot Topics

Related Articles