லங்கா பிரீமியர் லீக் தொடரில் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் தம்புள்ளை வைக்கிங்ஸ் அணியை வெற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
அதனையடுத்து இன்று இரவு 7 மணிக்கு லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) 2020 போட்டியின் இறுதிப் போட்டியில் யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியும் காலி கிளாடியேட்டர் அணியும் மோதிக்கொள்ளின்றன.
மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வெற்றியாளர்களுக்கான பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி,
வெற்றி பெறும் அணிக்கு வெற்றிக்கிண்ணமும் $ 100,000 மதிப்புள்ள பரிசுத் தொகையும், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு $ 50,000 பரிசுத் தொகையும், மற்றும் தனிநபர் விருதுகளில் ‘இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன்’க்கு, $ 2,500 மற்றும் ‘தொடரின் ஆட்ட நாயகன்’ க்கு, $ 8,000 பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளன.