உலகம்

பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனை – பாக். அரசு ஒப்புதல்!

பாகிஸ்தானில் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கு ஏதுவாக முன்வைக்கப்பட்டுள்ள அவசர சட்டத்திருத்தத்த யோசானைக்கு பாகிஸ்தானின் ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வி இன்று செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.

 

பாகிஸ்தானில் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் எனவும் குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிடவேண்டும் எனவும் அந்நாட்டு மக்கள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் பல சமூக நல அமைப்புகள் இதனை வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இது குறித்து இம்ரான் கான் தலைமையிலான தீவிர ஆலோசனையை அடுத்து பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மையை நீக்கி தண்டனை வழங்குவதற்கும் பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்கும் வழி வகை செய்யும் அவசர சட்டத் திருத்தத்துக்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அமைச்சரவை கடந்த செப்டம்பர் மாதம் அனுமதி அளித்தது.

இதனைத் தொடர்ந்து இந்த அவசர சட்டத்திருத்த யோசனை அந்நாட்டு ஜனாதிபதியிடம் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

இதனைப் பரிசீலித்த ஜனாதிபதி இதற்கு இன்று ஒப்புதல் வழங்கியுள்ளார்.

அவசர சட்டத் திருத்தத்தில்,
மோசமான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு இரசாயனம் மூலம் ஆண்மையை நீக்கம் செய்தல்.

பாலியல் குற்றங்களை விரைந்து விசாரிக்கும் வகையில், சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்தவும் 4 மாதங்களில் விசாரணையை முடிக்கவும் வேண்டும்.

பாலியல் வன்முறைகளில் பாதிக்கப்படும் நபர்களின் அடையாளங்களை வெளியிடுவதும் இந்தத் சட்டத்திருத்தத்தின் மூலம் குற்றமாகக் கருதப்படும்.
என்பன இந்தச் சட்டம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சட்டத்திருத்தத்தக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அடுத்துவரும் 120 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தை கூட்டி இந்த அவசர சட்டத்தை சமர்ப்பித்து அதற்கு அங்கீகாரம் பெற வேண்டும்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கார் பழுதடைந்த நிலையில் தனது குழந்தைகளுடன் நின்ற பாகிஸ்தான் பெண் ஒருவா் தனது குழந்தைகள் முன்பாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இதற்குப் பாகிஸ்தான் முழுவதும் இருந்து கடும் எதிா்ப்பலைகள் எழுந்ததை அடுத்து பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கும் யோசனை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles