உலகம்

இலங்கையில் இன்று 611 பேருக்கு கொரோனா தொற்று! மேலும் 06 உயிரிழப்புகள் பதிவு

நாட்டில் இன்று 611 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் மினுவங்கொடை – பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து மினுவங்கொடை – பேலியகொடை கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 31,070 ஆக உயர்வடைந்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 34,732 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளன ஏழு வெளிநாட்டவர்கள் உட்பட 8,923 பேர் நாடளாவியரீதியல் உள்ள கொரோனா தொற்றுக்கான 63 சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை இன்று நாட்டில் 06 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

84 மற்றும் 85 வயதுடைய ஆண்கள் இருவரும் 60 வயதுடைய பெண்ணொருவரும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக இன்று மதியம் அறிவிக்கப்பட்டது.

அத்துடன் மேலும் மூன்று கொரோனா இறப்புகள் தொடர்பில் இன்று இரவு அறிவிக்கப்பட்டது.

78 வயதுடைய ஆண் ஒருவரும் 50 மற்றும் 43 வயதுகளையுடைய பெண்கள் இருவருமே இவ்வாறு கொரோனா தொற்றினால் உயிரிழந்துதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.

இன்று நாட்டில் மேலும் 785 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 25,652. ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Hot Topics

Related Articles