உலகம்

தற்கொலை செய்துகொள்ள விரும்புபவர்களுக்கு அழைப்பு ! 9 பேரை வெட்டி கொன்று குளிர்சாதன பெட்டியில் வைத்த நபர்

ஜப்பானில், வாழ்க்கையில் விரக்தியடைந்து தற்கொலை எண்ணம் பற்றி டுவிட்டரில் கருத்து பதிவிடுபவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை சூசுமமான முறையில் 09 கொலைகளை செய்த ஜப்பான் நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .

 

ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகருக்கு அருகில் சாமா எனுமிடத்தை சேர்ந்த தகாஹிரோ ஷிரைசி ( வயது 30) என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் 2017ஆம் ஆண்டுகளில் இவ்வாறு காணமல் போன தனது தங்கையின் டுவிட்டர் கணக்கை ஆய்வு செய்த போது ஒருவரின் டுவிட்டர் அழைப்பை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தற்கொலை செய்ய வேண்டுமா என்னிடம் வாருங்கள் தற்கொலை குறித்து சிரமப்படுபவர்களுக்கு உதவ விரும்புகிறேன். எனக்கு தனி மெசேஜ் அனுப்புங்கள் என குறித்த நாரின் டுவிட்டர் கணக்கில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து தகாஹிரோ ஷிரைசி வீட்டை கண்டு பிடித்து புலனாய்வாளர்களும் பொலிஸாரும் மேற்கொண்ட சோதனையில் சில மனித தலைகள் மற்றும் உடல் உறுப்புகளை கண்டுபிடித்துள்ளார்கள்.

இதனையடுத்து குறித்த கொலையாளி பொலிஸாருக்கு வழங்கியுள்ள தகவல்கள் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கையில் விரக்தியடைந்து தற்கொலை எண்ணம் பற்றி டுவிட்டரில் கருத்து பதிவிடுபவர்களை தேர்ந்தெடுத்து, பேசி நட்பாக்கி கொள்வதுடன் தானும் அவர்களுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொல்ல தயார் என தெரிவித்து தற்கொலை எண்ணம் உள்ளவர்களை தன் வீட்டுக்கு அழைப்பதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் அவர்களை கொலை செய்து அவர்களின் தலை மற்றும் உடல் உறுப்புகளைத் தனித்தனியாக வெட்டி குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்து வந்துள்ளார்.

Pedestrians cross a street at Shinjuku commercial, business and administrative centre in Tokyo, Japan, 18 November 2020.

இதுவரை ஷிரைசி 15 முதல் 26 வயதுடைய 8 பெண்கள் உள்ளிட்ட 9 பேரை நட்பாக்கி கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்து வந்துளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நீதிமன்ற விசாரணையில் ஒன்பது பேரை கொலை செய்தததை ஷிரைசி ஒப்புக் கொண்டார். அவருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

ஷிரைசி தரப்பில் வாதாடிய வழக்கறிஞரோ, இவர் கொலை செய்யப்பட்டவர்களின் சம்மதத்துடன் தான் கொலை செய்து இருக்கிறார், எனவே சம்மதத்துடன் கொலை செய்ததை கவனத்தில் கொண்டு தண்டனை வழங்க வேண்டும் என வாதாடினார்.
எனினும் ஷிரைசியே, விசரணைகளின் போது கொலை செய்யப்பட்டவர்களின் சம்மதம் இல்லாமல் கொலை செய்ததாக ஒப்புகொண்டுள்ளார்.

இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ஷிரைசிக்கு மரண தண்டனை விதிப்பதாக தெரிவித்தார்.

இந்த கொலை சம்பவத்தால், தற்கொலை அல்லது தங்களைத் தாங்களே வருத்திக் கொள்வதை டுவிட்டர் பயனர்கள் ஊக்குவிக்கக் கூடாது என ஒரு புதிய விதியை டுவிட்டர் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் குறித்த ஷிரைசியை உள்ளூர் மக்கள் டுவிட்டர் கொலைகாரன் என அழைக்க ஆரம்பித்துள்ளனர்.

ஜப்பானின் தற்கொலை விகிதம் உலகின் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது. சமீபத்தில் தொற்றுநோயின் பாதிப்புகளால் மக்கள் தற்கொலை எண்ணத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இந்த ஆண்டு இந்த தற்கொலை எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles