உலகம்

இலங்கை மக்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நாட்டின் சகல குடும்பங்களுக்கும் சலுகை வட்டி அடிப்படையில் நிதி உதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த கடன்நிதி உதவி 3 கட்டங்களாக வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்தம் 50000 ரூபாவுக்கு அதிக சம்பளம் அல்லது வருமானத்தைப் பெறுவோருக்கு 50 ஆயிரம் ரூபாய் கடன் தொகையும்,
மாதாந்தம் 25000 முதல் 50000 ரூபாய் வரையில் வருமானம் பெறுகின்றவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் கடன் தொகையும்,
25 ஆயிரம் ரூபாவுக்கும் குறைந்த வருமானத்தைப் பெறுகின்றவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் கடன் தொகையும், பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச வங்கிகள் ஊடாக இந்த கடனைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதோடு, 10 மாதங்களுக்குள் இந்த கடனை செலுத்தி முடிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது நிறுவனத்தின் பிரதானியால் உறுதிப்படுத்தப்பட்டு வழங்கப்படுகின்ற கடிதத்தை சேவை நிறுவனத்தின் ஊடாக அரச வங்கிகளுக்கு அனுப்பி, வாடிக்கையாளர் கணக்குகளுக்கு இந்த கடன்தொகையை தாமதமின்றி மாற்றிக் கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த கடன்தொகைக்கான மாதாந்த வட்டியாக 0.625 சதவீதம் அறவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Hot Topics

Related Articles