இலங்கை வைத்தியர்கள் புதிய சாதனை

கராபிட்டிய ஜிஹெச் வைத்தியர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமியை வெற்றிகரமாக காப்பாற்றியுள்ளதுடன் ஹியூமரஸ் எலும்பை சத்திரசிகிச்சை மேற்கொண்டு மாற்றி சாதனை படைத்துள்ளனர்.

இலங்கையில் முதன்முறையாக, ஒன்றரை வயது சிறுமி ஒருவருக்கு கராபிட்டிய பொது வைத்தியசாலை நிபுணர்களால் அதிக அளவு கதிரியக்க சிகிச்சையைப் பயன்படுத்தி புற்றுநோய் செல்களை அழிக்கப்பட்டதன் பின்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹியூமரஸ் எலும்பு வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது.

குறித்த அறுவை சிகிச்சையை வைத்தியர்கள் சுமார் எட்டரை மணி நேரம் முன்னெடுத்துள்ளனர்.

பெண் குழந்தைக்கு எவிங் சர்கோமா என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் பல மாதங்களாக கீமோதெரபி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனளிக்காததன் காரணமாக வைத்திய நிபுணர்கள் அவரது கையை வெட்டாமல் ஒரு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.

அதிர்ஷ்டவசமாக, அறுவை சிகிச்சையின் பின், சிறுமி அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்தியர்களின் கண்காணிப்பில் மீண்டு வருவதாகவும் அவரின் கை விரல்கள் சரியாக வேலை செய்வதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ் அறுவை சிகிச்சையை நிபுணர் வைத்தியர் ஜனத் லியானகே மற்றும் ஸ்ரீ ஜெயவர்தனபுரா வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் கவுசல் கருணாரத்ன ஆகியோர் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

பொதுவாக, அந்த வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, மருத்துவர்கள் அவயவங்களை வெட்ட பரிந்துரைக்கின்றனர். இந்நிலையில் குறித்த சிறுமிக்கு இவ்வாறு இலங்கையில் முதன் முறையாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளமை பலரின் பாரட்டை பெற்றுள்ளது.

Hot Topics

Related Articles