உலகம்

ரஜினியின் கட்சி பெயர் மற்றும் சின்னத்தை அறிந்து உற்சாகத்தில் ரசிகர்கள்!

“மாத்துவோம். எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்லை” என்ற வனங்களுடன் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்திருந்த ரஜினிகாந்த் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி கட்சி தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த ரஜினி ரசிகர்கள் கடந்த 12 ஆம் திகதி அவரது பிறந்தநாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடினார்கள்.

இந்நிலையில் ரஜினியின் கட்சி பெயர் மற்றும் சின்னம் தொர்பில் தகவல் வெளியாகி நடிகர் ரஜினியின் ஆதரவாளர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையம் அறிவித்த கட்சிகள் மற்றும் சின்னங்கள் பட்டியல் வரிசையில் உள்ள 9 கட்சிகளில் 8ஆவது கட்சியாக “மக்கள் சேவை கட்சி” என்ற கட்சியின் பெயர் இடம் பெற்றுள்ளது. எர்ணாவூர் பாலாஜி நகரை தலைமை இடமாக கொண்டு இந்த கட்சி பதிவு செய்யப்பட்டிருந்தது.

முதலில் அந்த கட்சியை பதிவு செய்தது யார் என்பது தெரியாமல் இருந்துள்ள நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ரஜினி பதிவு செய்துள்ள கட்சிதான் “மக்கள் சேவை கட்சி” என்று தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ள ஆவணத்தில் அந்தகட்சியின் நிறுவனராக ரஜினிகாந்த்தின் பெயர் இடம் பெற்றிருப்பதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ரஜினி கட்சியின் பெயர் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் “மக்கள் சேவை கட்சி” என்ற பெயர் சூட்டப்பட்டிருப்பது தேர்தல் ஆணையம் மூலம் தெரிய வந்திருக்கிறது.
ரஜினியின் இந்த புதிய கட்சிக்கு தேர்தல் சின்னமாக “ஆட்டோ” வை தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

ஏற்கனவே ரஜினி தரப்பில் “பாபாவின் முத்திரை” சின்னத்தை ஒதுக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
பாபாவின் இரண்டு விரல்களை உயர்த்தி காட்டும் ஹஸ்த முத்திரை சின்னம் காங்கிரஸ் கட்சியின் கை சின்னம் போன்று தோற்றம் அளிக்கும் என்பதால் அதை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டதாக தெரிய வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து “ஆட்டோ” சின்னத்தை ரஜினி கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆனால் “ஆட்டோ” சின்னம் கிடைத்திருப்பது ரஜினிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் திருப்தியை கொடுத்துள்ளது.

1995 ஆம் ஆண்டு ரஜினி நடித்து வெளியான ‘பாட்ஷா’ படத்தில் ரஜினி ஆட்டோ ஓட்டுநராக நடித்திருந்தார்.
தமிழ்நாடு முழுவதும் இந்த படம் அமோக வெற்றி பெற்று ரஜினியின் ஆட்டோக்காரன் பாட்டு மிகவும் பிரபல மானது. எனவே இந்த சின்னம் மக்கள் மத்தியில் இலகுவாக சென்றடையும் என ரஜினி தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசியலில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் புதியகட்சி, சின்னமும் பெயரும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles