உலகம்

உலகளாவிய SBT நிகழ்ச்சிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஹேலிஸ் ஃபெப்ரிக் பி.எல்.சி. நிறுவனம்

ஜவுளி உற்பத்தியில் முன்னோடி நிறுவனமான ஹேலிஸ் ஃபெப்ரிக் பி.எல்.சி. நிறுவனம், பசுமை இல்ல வாயுக்கள் (Green House Gases) மாசை குறைத்தல் மற்றும் உலக வெப்பமயமாதலை 1.5 0 C செல்சியஸுக்கு கட்டுப்படுத்துவதற்கு உலகளாவிய SBT நிகழ்ச்சிக்கு (STi) அர்ப்பணிக்கப்பட்ட உலகில் பிரதான நிறுவனங்களுக்குள் தமது பெயரையும் இணைத்த இலங்கையின் முதலாவது ஜவுளி உற்பத்தி
நிறுவனம் மட்டுமன்றி நாட்டின் நான்காவது உள்நாட்டு தயாரிப்பு நிறுவனமாக இடம்பிடித்துள்ளது.

SBTi எனும் CDP Worldwide, World Resources Institute (WRI), உலக இயற்கை பாதுகாப்பு நிதியம் (WWF) மற்றும் United Nations Global Compact (UNGC) இடையிலான புரிந்துணர்வின் விளைவாகும். இது ‘We Mean Business Coalition’s Take Action’ பெயரிலான காலநிலை மாற்றங்கள் தொடர்பான தளத்தின் ஒரு
அங்கமாக நிறுவனத்தினால் தமது அர்ப்பணிப்பினை பெற்றுக் கொடுக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்க உலகளாவிய வேலைத்திட்டமாகும்.

அதுமட்டுமல்லாமல், பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளுக்கு அமைய உலக வெப்பமயமாதலை அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதற்காக 1.5 0 C செல்சியஸ் மற்றும் 2 0 Cக்கும் குறைவான மட்டத்தில் வைத்துக்
கொள்வதற்கு நிறுவனம் ஒன்று பசுமை இல்ல வாயு மாசுவை எந்தளவில் மற்றும் எவ்வளவு விரைவில் குறைக்க முடியும் என்பது தொடர்பில் SBTi தீர்மானிக்கும்.

அத்துடன் இது 2050ஆம் ஆண்டளவில் தூய பசுமை இல்ல வாயு மாசடைவதை 100%ஆல் குறைப்பதற்கு எடுக்கும் முயற்சியின் ஒரு அங்கமாகும்.

புத்தாக்கங்கள், கழிவுப் பொருட்களை குறைத்தல், செயல்திறன் அதிகரித்தல் மற்றும் ஒழுங்குமுறை அபாயங்கள், நிச்சயமற்ற தன்மை மற்றும் சக்தி செலவுகளுக்கான உறுதியற்ற தன்மையின்
வெளிப்பாடுகளை குறைப்பதுடன் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்தல் போன்றவற்றில் நிறுவனம் இந்த இலக்கை அடைவதற்கு நடவடிக்கை எடுக்கும்.

SBTi தொடர்பில் அர்ப்பணிப்பு செய்ய நிறுவனத்தினால் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சிறந்த சுற்றுச்சூழல் நிலைத்தன்மை நடவடிக்கையை உறுதிசெய்வதற்கு உறுதுணையாக இருக்கும்.

“காபன் மாசை குறைத்துக் கொள்வதற்கு நாம் அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அத்தியாவசியமாக உள்ளதுடன், மிகவும் கவனம் செலுத்த வேண்டியது காலநிலை மாற்றங்களுக்கு எதிரான
போராட்டத்தின் போது நிறுவனங்கள் அர்த்தபுஷ்டியான நடவடிக்கைகளை எடுப்பதாகும்.

SBTi தொடர்பில் எமது அர்ப்பணிப்புடன் காலநிலை மாசடைவதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் உலகளாவிய போராட்டத்திற்கு உலகம் முழுவதிலும் பரந்துள்ள முன்னணி அமைப்புக்களுடன் உத்தியோகபூர்வமாக
இணைந்து கொள்ள கிடைத்தமை குறித்து நாம் பெருமை அடைவதுடன், அடுத்த தசாப்தத்திற்குள் எமது பசுமை இல்ல வாயு மாசுவை குறைத்துக் கொண்டு பூஜ்ய நிலைமைக்கு கொண்டுவருவதே இந்த
பிரபலமான உலகளாவிய வேலைத்திடத்தின் கீழ் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

” என ஹேலிஸ் ஃபெப்ரிக்கின் முகாமைத்துவப் பணிப்பாளரும்
பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரொஹான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.

Hot Topics

Related Articles