உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் தீ பரவல்! நிலைமை கட்டுபாட்டுக்குள்!

கொழும்பு-புதுக்கடை உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் ஏற்பட்ட தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.


ஆனால் அடித்தள பதிவு அறை பகுதியில் இன்னும் கடுமையான புகை மண்டலம் காணப்படுவதுடன் தீ பரவலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்  தொடர்பில் இன்னும் தகவல் வெளியாக வில்லை.


இதற்காக 8 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிாிவு தொிவித்துள்ளது.

 

 

மின் ஒழுக்கு காரணமாக இந்த தீர்ப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்  ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரித்துள்ளார்.

Hot Topics

Related Articles