உலகம்

தோல்வியை தழுவிய தம்புள்ள வைகிங் அணி! வெற்றியை நோக்கி ஜப்ஃனா ஸ்டேலியன்ஸ்

லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு – 20 தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நேற்று ஆரம்பமான நிலையில் முதலாவது அரையிறுதிப் போட்டியில் அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் மற்றும் பானுக ராஜபக்ஷ தலைமையிலான காலி கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.

இந்நிலையில் இன்று இரண்டாவது அரையிறுதிப் போட்டி தம்புள்ள வைகிங் மற்றும் ஜப்ஃனா ஸ்டேலியன்ஸ் ஆகிய அணிகளுக்கிடையில் அம்பாந்தோட்டையில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் ஜப்ஃனா ஸ்டேலியன் அணி 37 ஓட்டங்களினால் வெற்றிப்பெற்றுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தம்புள்ள வைகிங் அணி ஜப்ஃனா ஸ்டேலியன்ஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்ஃனா ஸ்டேலியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுள்ளது.

166 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை வைக்கிங் அணி 19.1 ஓவர்களில் 10 விக்கட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவிக்கொண்டது.

இதற்கமைய நாளை மறு தினம் இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியில் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியுடன் ஜப்ஃனா ஸ்டேலியன்ஸ் அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles