உலகம்

கொரோனாவால் நாட்டில் மேலும் இருவர் பலி! மீண்டும் திறக்கப்படும் பேலியகொடை மீன் சந்தை

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதே வேளை நாட்டில் இன்று 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 33,478 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 9,015 பேர் நாட்டில் உள்ள கொரோானா தொற்றுக்கான வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருவதுடன் 510 பேர் கொரோனா சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இன்றையதினம் கொரோனா தொற்றுக்குள்ளான 516 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,309 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் இரண்டு மரணங்கள் பதிவாகியதையடுத்து மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 154 ஆக உயர்வடைந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் விபரம்,
பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயது பெண் கொரோனா தொற்று காரணமாக கடந்த 11ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 14 ஐ சேர்ந்த 65 வயது ஆண் ஒருவர் தனியார் வைத்தியசாலையில் கொரோனா தொற்று காரணமாக 13 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

மீண்டும் திறக்கப்படும் பேலியகொடை மீன் சந்தை
பேலியகொடை மீன் சந்தையை சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் எதிர்வரும் புதன்கிழமை முதல் மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பேலியகொட மத்திய மீன் சந்தையில் கொரோனா கொத்தணி உருவாகியதையடுத்து கடந்த ஒக்டோபர் 21 ஆம் திகதி சந்தை செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலைகளில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3087 ஆக உயர்வு!
சிறைச்சாலையுடன் தொடர்புடைய மேலும் 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 3087 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தொிவித்துள்ளது.
இவ்வாறு தொற்றுக்குள்ளனவர்களில் 2414 ஆண் சிறைக் கைதிகளும் 189 பெண் சிறைக் கைதிகளும் சிறைச்சாலை அதிகாாிகள் 103 பேரும் அடங்குவதாக தொிவிக்கப்படுகின்றது.

நேற்று கொழும்பு மாவட்டத்தில் 444 பேருக்கு தொற்று உறுதி!
நேற்றைய தினம் (13) நாட்டில் 655 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்துள்ள நிலையில் அவர்களில் 444 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தவிர கம்பஹா மாவட்டத்தில் 75 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 41 ஏனைய 90 பேரும் வெவ்வேறு மாவட்டங்களில் பதிவாகியிருப்பதாக அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவிஸ்ஸாவளை – சீதாவக்கை ஏற்றுமதி வலயத்தில் புதிய தொற்றாளர்கள் 41 பேர் நேற்று (13) கண்டறியப்பட்டதுடன் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்வடைந்துள்ளது.

தொற்றுக்குள்ளானவர்கள் ஹங்வெல்ல – தெஹியோவிட்ட, எஹலியகொட மற்றும் ருவன்வெல்ல ஆகிய சுகாதார மருத்துவ பிாிவுகளைச் சேர்ந்த நபர்களாவர்.
இதேவேளை எஹலியகொட பிரதேசத்தில் 09 பேர் நேற்று தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டதையடுத்து தற்போது அப்பிரதேசத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 250 ஆக உயர்வடைந்துள்ளது.

 

Hot Topics

Related Articles