உலகம்

800 வருடங்களுக்குப் பிறகு வானில் தோன்றும் அரிய நிகழ்வு!

800 ஆண்டுகளுக்கு பிறகு சூரிய மண்டலத்தின் இரண்டு பெரிய கிரகங்களான வியாழன் மற்றும் சனி ஒன்றுக்கு ஒன்று நெருங்கி வந்து நட்சத்திரம் போன்று தோன்றும் அரிய நிகழ்வு எதிர் வரும் 21 ஆம் திகதி வானில் நடைபெறவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிய நிகழ்வை தெளிவான வானில் உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் பார்க்கலாம்.

இந்த ஆண்டின் நீண்ட இரவான டிசம்பர் 21 ஆம் திகதி வானில் இந்த இரண்டு கிரகங்கள் இணையவிருக்கின்றன.

கிட்டத்தட்ட 800 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அரிய நிகழ்வு உலகில் உள்ளவர்களுக்கு தெளிவாக தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

லட்சக்கணக்கான கிலோமீட்டகள் இடைவெளியிலேயே இருக்கின்ற சனி, வியாழன் ஆகிய கோள்கள் கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை அருகருகே வருகின்றன. கடைசியாக 1226 ஆம் ஆண்டு இந்த கிரகங்களின் இணைவை பூமியிலிருந்து பார்க்க முடிந்தது.

அடுத்த 400 ஆண்டுகள் கழித்து 1623 ஆம் ஆண்டில் இவை நெருங்கி வந்த காட்சி பூமியில் தென்படவில்லை என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், 800 ஆண்டுகளுக்குப் பின் இந்த நிகழ்வு மீண்டும் பூமியில் தெரியவிருக்கிறது.

இவ்வாறு கிரகங்கள் இணைந்து நட்சத்திரம் போல ஒளிரும் நிகழ்வு கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆண்டின் பெரும்பகுதியில், வியாழனும் சனியும் ஒரே வானத்தை தோன்றுகின்றன. டிசம்பர் மாதத்தில் 2 பாகை இடைவெளியில் இவ் இரு கோல்களும் தோன்ற ஆரம்பிக்கின்றன.

இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று சந்திக்காத போதும் ஒரே நேர்க்கோட்டில் தோன்றும்.

​​சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு தென்மேற்கு வானில் இவ் இரு கோல்களையுதம் அடிவானில் இருந்து 20 பாகை கோணத்திற்கு மேலே நீங்கள் காண முடியும்.

 

Hot Topics

Related Articles