உலகம்

24 மணி நேரத்துக்குள் அமெரிக்காவில் முதலாவது கொரோனா தடுப்பூசி – ட்ரம்ப் அதிரடி!

அமெரிக்காவில் பைசர் நிறுவனம், பயோன்டெக் நிறுவனம் உருவாக்கி உள்ள தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்ததையடுத்து 24 மணிநேரத்துக்குள் அமெரிக்கர்களுக்க மதலாவது தடுப்பூசி வழங்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் தலைமை விஞ்ஞானியான டெனிஸ் ஹிண்டன் பைசர் நிறுவனத்துக்கு எழுதிய கடிதத்தில் கொரோனா வைரசை தடுப்பதற்கான தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு நான் அங்கீகரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமெரிக்க சுகாதார அமைச்சர் அலெக்ஸ் அசார் கூறும்போது, ‘தடுப்பூசி விரைவில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்தது தொடர்பாக  ட்ரம்ப் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார்.இதன் போது கூறியுள்ளதாவது,

அமெரிக்காவில் முதல் தடுப்பூசி 24 மணி நேரத்துக்குள் வழங்கப்படும். ஏற்கனவே ஒவ்வொரு மாகாணத்துக்கும் நாங்கள் தடுப்பூசியை அனுப்பும் பணியை தொடங்கி விட்டோம்.

யாருக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்பதை அந்தந்த மாகாண கவர்னர்கள் முடிவு செய்வார்கள்.

மூத்த குடிமக்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இது விரைவாகவும், வியக்கத்தக்க முறையில் இறப்புகளையும் வைத்தியசாலையில் அனுமிக்கப்படும் தொற்றாளர்களையும் குறைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பைசர் மற்றும் பயோன்டெக் நிறுவனங்களின் தடுப்பூசிக்கு முதன் முதலில் இங்கிலாந்து அனுமதி அளித்தது.

அதன்பின் பக்ரைன், கனடா, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் அவசர பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்தள்ளது.

இந் நிலையில் தற்போது பைசர் நிறுவன தடுப்பூசிக்கு அமெரிக்காவும் அனுமதி அளித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles