உலகம்

மழை நீரை சேமிக்க தமிழக அரசு புதிய திட்டம் – இந்தியாவில் முதல் முறையாக மழைநீர் ஊடுருவல் வடிகால்

இந்தியாவிலேயே முதன்முறையாக ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் ஊடுருவல் வடிகால் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது.

மழை நீரை சேமிக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை வடபழனி ஆண்டவர் முருகன் கோயில் மற்றும் மயிலாப்பூர் பெருமாள் கோயில் வளாகத்தில் மழைநீர் ஊடுருவல் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.

வடபழனி ஆண்டவர் கோவிலை சுற்றி சுமார் 320 மீட்டர் தொலைவிற்கு இந்த வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.

4 அடி பள்ளம் வெட்டப்பட்டு ஜல்லி மற்றும் மழைநீரை கடத்தி செல்லும் குழாய் அமைப்பு என 4 படிநிலைகளை கொண்டதாக இந்த ஊடுருவல் வடிகால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட மழைநீர் சேமிப்பு திட்டத்தால் ஒரே நாளில் நிரம்பிய வடபழனி முருகன் ஆலய திருக்குளம் - பக்தர்கள் மகிழ்ச்சி
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வடபழனி கோயில் குளம் நீர் வற்றி வரண்டு போன நிலையில் , தற்போது அமைக்கப்பட்டுள்ள மழைநீர் ஊடுருவல் வடிகால் வாயிலாக குளத்தில் பாதியளவுக்கு நீர் நிரம்பியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிக்கின்றனர்.

கோயில் குளங்கள் மட்டுமல்லாது சிறு சிறு குளம், குட்டை, கண்மாய் போன்றவற்றிற்கும் இதே போன்று மழைநீர் ஊடுருவல் வடிகால் அமைக்கப்படுமாயிக் போது மழை நீர் வீணாகாது எனவும் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து தண்ணீர் பிரச்னை குறைந்துவிடும் என சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Hot Topics

Related Articles