உலகம்

சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளையொட்டி வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்து வரும் ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தனது 71 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகின்றார்.

உலகளவில் தனது நடிப்பு பாணியினால் பல கோடி ரசிகர்களை கொண்ட நடிகர் ரஜினிகாந்துக்கு நாமும் இனிய பிறந்த நாள் வாழ்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.

இதேவேளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு போயஸ்கார்டன் பகுதியில் அவரது வீட்டை சுற்றி வித விதமான போஸ்டர்களில் வித்தியாசமான வாசகங்களுடன் அவரது ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரஉள்ளதை வரவேற்கும் விதமாக இவ் வாழ்த்து போஸ்டர்களில் வித்தியாசமான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.

அவற்றில், ‘ரஜினி எனும் நான் என்று விரைவில் சட்டசபையில் ஒலிக்கும்! அன்று தமிழக மக்களின் வாழ்வு செழிக்கும்!’, ‘மக்கள் தலைவரே!’, ‘மக்களின் முதல்வரே’, ‘ஆன்மிக அரசியலின் ஆளுமையே’, ‘அரசியலின் தூய்மையே’, ‘வெள்ளை மனமே’, ‘எவருக்கும் அஞ்சாதவரே’, ‘எங்கள் நிகழ்காலமே! தமிழகத்தின் எதிர்காலமே!’, ‘தமிழக மக்களின் கடைசி நம்பிக்கையே!’ ‘மக்களின் நெஞ்சம் நிறைந்தவரே!’ என வித்தியாசமான வாசகங்கள் அடங்கியுள்ளன.

ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சியை அறிவித்துக்க உள்ள நிலையில் அவரது பிறந்தநாள் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்து உள்ளது.

இதன் காரணமாக ரஜினியின் ரசிகர்கள் கோ பூஜை, கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை இன்று மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Hot Topics

Related Articles