உலகம்

இலங்கையில் தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு

கொரோனா தொற்று பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொழும்பில் உள்ள சில வீட்டுத்திட்ட தொகுதிகள் இன்றிலிருந்து தனிமைப்படுத்தலில் இருந்து உடனடியாக அமுலாகும் வகையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதுகுறித்த தகவலை இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தலில் இருந்து கொழும்பு, முகத்துவாரத்தில் அமைந்துள்ள மெத்சந்த செவன, மிஹிஜய செவன, கொழும்பு மட்டக்குளி பகுதியில் அமைந்துள்ள ரந்திய உயன, கிராண்ட்பாஸில் உள்ள மோதர உயன மற்றும் – சமகிபுர, தெமட்டகொடயில் உள்ள மிஹிந்துசெத்புர ஆகிய இடங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 6 அடுக்குமாடி குடியிருப்புக்களும் இன்று (12) காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தல் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள 6 அடுக்குமாடி குடியிருப்புக்களில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகளின் பின்னர் அதன் முடிவுகளுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இராணவத்தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Hot Topics

Related Articles