உலகம்

Good Life X Accelerator 2020 குடும்பம் – ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது

தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Good Life (GLX) Accelerator நிகழ்வு வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த 12 வார காலம் இடம்பெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த தெரிவு செய்யப்பட்ட பத்து நிறுவனங்களின் ஸ்தாபகர்கள் முன்வந்து தாம் பெற்றுக் கொண்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். BusSeat, Good Folks, Local Forecast, Mindful Travels, Moonshadow Naturals, Olai, Owita Organics, RAW, Sebastco மற்றும் Wawamu ஆகியன அந்த நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியினூடாக நிறுவனங்கள் பெற்றுக் கொண்ட பெறுமதி சேர் அனுகூலங்களினூடாக ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கு தமது தயாரிப்புகளை மேம்படுத்தி சந்தைப்படுத்திக் கொள்ள அவசியமான வெளிப்படுத்தல்கள், முக்கியத்துவம் வாய்ந்த உறவுகளைக் கட்டியெழுப்பல் மற்றும் சர்வதேச வலையமைப்புகளுடன் இணைப்பை ஏற்படுத்த அவசியமான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டிருந்தன. அவசியமான வழிகாட்டல்கள், நிபுணத்துவம் மற்றும் ஆலோசனைகள் போன்றன தமது வியாபாரங்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்பிக் கொள்வதற்கு அவசியமான அறிவை பெற்றுக் கொள்ள ஏதுவாக அமைந்திருந்தன.

இந்த நிகழ்ச்சியின் இறுதி நாள் Demo Day நிகழ்வின் போது, ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு முதலீட்டாளர்கள், தொழிற்துறை, கொள்கைதீர்மானமெடுப்போர் போன்றவர்களுக்கு வெளிப்படுத்தப்படும் வாய்ப்புக் கிட்டும். இந்த நிகழ்வு அடுத்த மாதம் முற்பகுதியில் மெய்நிகர் நிகழ்வாக இடம்பெறும். ஆர்வமுள்ள பார்வையாளர்கள் இந்நிகழ்வில் இணைந்து கொள்ள https://bit.ly/GLXDDay2020 எனும் பகுதியில் தம்மைப் பதிவு செய்து கொள்ள முடியும். Demo Day க்கு தம்மை தயார்ப்படுத்தும் நிலையில், இந்த நிறுவனங்களின் ஸ்தாபகர்கள் தாம் இந்த நிகழ்வினூடாக பெற்றுக் கொண்ட அனுகூலங்கள் தொடர்பான விளக்கங்களை வழங்கியிருந்தனர்.

Good Folks இன் இணை ஸ்தாபகர் தினேஷ் கருத்துத் தெரிவிக்கையில், “குறிப்பிட்ட இலக்குகள் மற்றும் நோக்கங்கள் தொடர்பில் ஸ்தாபகர்களின் நிலைப்பாட்டை ஊக்குவித்து சவாலுக்குட்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சித் திட்டம் அமைந்திருந்தது. நாம் எவ்வாறானவர்களாக இருக்க வேண்டும், எவ்வாறு நாம் இயங்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள GLX எமக்கு உதவியாக இருந்தது.” என்றார். இதே கருத்துக்களை Sebastco இன் ஸ்தாபகர் ஷிரானும் வெளிப்படுத்தியிருந்தார். அவர் குறிப்பிடுகையில், “எமது கவனிப்பை மேலும் விரிவாக்கும் வகையில், எமது வர்த்தக நாமம் மற்றும் கவனிப்பை எமது தீர்வில் கவனம் செலுத்துவதற்கு உதவியிருந்தது. இதனூடாக எமது தயாரிப்பின் வளர்ச்சி மற்றும் வருமானத்தை மேலும் மேம்படுத்திக் கொள்ள முடிந்தது.” என்றார்.

ஆரம்ப நிலை நிறுவனங்களை கட்டியெழுப்புவதில் GLX Accelerator நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக வழங்கப்படும் ஆலோசனை உதவிகளை குறிப்பிடலாம். இந்தப் பெருங்குடும்பத்துக்காக, இந்த நிகழ்ச்சி ஐரோப்பாவின் முன்னணி வியாபார பாடசாலைகளில் ஒன்றான ESCP உடன் கைகோர்த்திருந்தது. அதனூடாக, நிறுவனங்களுக்கு நிபுணத்துவ வழிகாட்டல்களை பெற்றுக் கொள்ளவும், புதிய தோற்றப்பாடுகளை அறிந்து கொள்ளவும் வழிகோலியது. ESCP இன் இணை ஸ்தாபகரும் U- School இன் விரிவுரையாளருமான பீற்றர் போர்சர்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “சகல GLX அணியினரும் இந்த நிகழ்வை மிகவும் பாரதூரமாக கருதி, கடுமையாக உழைத்தனர். இதனால் எதிர்காலத்தில் எழக்கூடிய சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையில் தயார்நிலையிலுள்ளனர்.” என்றார்.

Wawamu ஸ்தாபகர் சேஷான் தாம் சர்வதேச ரீதியில் அனுபவம் வாய்ந்த ஆலோசகர்களின் வழிகாட்டல்களை பெற்றுக் கொண்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “பல வழிகளில் எமக்கு உதவியிருந்தனர். குறிப்பாக எமது வியாபார மாதிரியை மேம்படுத்திக் கொள்ள, நிகழ்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் எமக்கு வழிகாட்டியிருந்தனர். ஏனைய நிறுவனங்களுடன் ஒன்றித்த விடயங்களை இனங்காண உதவியிருந்தனர்.” என்றார்.

BusSeat மற்றும் Moonshadow Naturals போன்ற ஆரம்பநிலை நிறுவனங்களுக்கும் இந்தத் நிகழ்ச்சித் திட்டத்தினூடாக தமது துறைசார் அறிவை மேம்படுத்திக் கொள்ள முடிந்தது. தாம் பெற்றுக் கொண்ட அனுபவம் தொடர்பில் இந்நிறுவனங்களின் உரிமையாளர்கள் இணைந்து தெரிவிக்கையில் “எமது வியாபாரங்களில் வெவ்வேறு விடயங்கள் தொடர்பில் அறிந்து கொள்ள எமக்கு ஆலோசனை வழங்கல்கள் பெரிதும் உதவியிருந்தன. அவ்வாறான பரந்தளவு அனுபவம் மிக்கவர்களுடன் தொடர்புகளை பேணுவது என்பதும் உதவிகரமானதாக அமைந்திருந்தது. ஆரம்பநிலை நிறுவனம் எனும் வகையில் காணப்படும் சவால்கள் தொடர்பிலும் புரிந்துணர்வைக் கொண்டிருக்க முடிந்தது.” என்றனர்.

எந்தவொரு ஆரம்பநிலை நிறுவனத்துக்கும் நிதி வழங்குவது என்பது அத்தியாவசியமான அங்கமாகும். எங்கு ஆரம்பிப்பது என்பதை அறிந்து கொள்வது கடினமானதாகும். சேவைகள் மற்றும் கொள்முதல்கள் வடிவில் நன்கொடைகளை பெற்றுக் கொண்டவர்கள் எனும் வகையில், ஸ்தாபகர்களுக்கு தமது நிறுவனங்களின் நீண்ட கால செயற்பாடுகள் மற்றும் வளர்ச்சிக்கான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. GLX Accelerator நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து கொண்டு, இந்த அடித்தளத்தை ஏற்படுத்தியிருந்தமையானது, நிறுவனங்களுக்கு தமது தன்னேற்புத்திட்டத்தை பூர்த்தி செய்ய சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது. Sebastco இன் ஷிரான் குறிப்பிடுகையில், “நன்கொடை ஒன்றை பெற்றுக் கொள்வது என்பது, எமது வியாபாரத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல மிகவும் உதவியாக அமைந்திருந்தது.” என்றார்.

பெருமளவானோரை இணைத்து, குறிப்பாக அவசியமான நேரத்தில் சரியான நபருடன் உரையாட வாய்ப்பை வழங்குவது என்பது வியாபாரத்துக்கு மிகவும் முக்கியமானதாகும். RAW இன் ஸ்தாபகர் ரொனலி கருத்துத் தெரிவிக்கையில், “இந்த நிகழ்ச்சியினூடாக எனது வலையமைப்பு விஸ்தரிக்கப்பட்டிருந்ததுடன், எது மிகவும் முக்கியமானது என்பது தொடர்பில் என்னால் கவனம் செலுத்தி திட்டமிட முடிந்தது.” என்றார். Owita Organics ஸ்தாபகர் விஷாங்கன கருத்துத் தெரிவிக்கையில், “GLX நிகழ்ச்சி ஊடாக பல உள்நாட்டு மற்றும் சர்வதேச நிபுணர்களுக்கு நாம் அறிமுகம் செய்யப்பட்டு எமது வியாபாரங்களை மேம்படுத்துவது தொடர்பில் பெருமளவு அறிவையும் அனுபவத்தையும் பெற்றுக் கொண்டோம்.” என்றார். Olai இன் யதுஷா தெரிவிக்கையில். “இதர பங்குபற்றுநர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியிருந்ததனூடாக எனது வலையமைப்பை என்னால் விஸ்தரித்துக் கொள்ள முடிந்தது.” என்றார்.
GLX நிகழ்ச்சியினூடாக, ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு பெறுமதி வாய்ந்த உதவிகள் வழங்கப்பட்டிருந்தன. அதனூடாக அந்நிறுவனங்களுக்கு தமது இலக்குகளை எய்துவதற்கு நேர்த்தியான பகுதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.

GIZ இலங்கையின் சிறிய, நடுத்தரளவு தொழிற்துறையின் அபிவிருத்தி செயற்பாடுகளின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட GLX Accelerator நிகழ்ச்சியினூடாக, ஆரம்ப நிலையிலுள்ள தொழில்முயற்சியாண்மைகளின் ஒழுக்கமான மற்றும் நிலைபேறான தன்மையை கட்டியெழுப்புவதற்கு உதவிகள் வழங்கப்பட்டிருந்தன. தெரிவு செய்யப்பட்ட ஆரம்ப நிலை நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான வழிகாட்டல், பயிற்சி மற்றும் கல்விச் சேவை வழங்குநர்களுடனான உறுதியான வலையமைப்பை ஏற்படுத்திக் கொள்ளல் மற்றும் அவர்களின் வியாபாரங்களை கட்டியெழுப்பிக் கொள்வதற்கு அவசியமான இதர பயனுள்ள வளங்கள் போன்றனவும் வழங்கப்பட்டிருந்தன.

Hot Topics

Related Articles