உலகம்

பெண்களுக்கெதிரான வன்முறைக்கு எதிராக இப்பொழுதே நடவடிக்கை எடுப்போம்

உலகளாவியரீதியில் பின்தொடரும் பெண்களுக்கெதிரான வன்முறைக்கு எதிராக இப்பொழுதே நடவடிக்கை எடுப்போம்.

பெண்கள் மற்றும் சிறுமிகள் வன்முறையிலிருந்து பாதுகாப்பதற்கான முயற்சியை பலப்படுத்தவும் கொவிட்-19 உலகளாவிய நோய்நிலைமைக்கு இடையில் அவர்களின் சுகாதாரத்தேவைகளிற்கு ஆதரவாக இருப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்-கிழக்கு பிராந்தியங்களில் உடனடியான நடவடிக்கை தேவைப்படுகின்றது.

உலகளாவியரீதியில் மூன்றில் ஒரு பெண் உடலியல் மற்றும்/அல்லது பாலியல் வன்முறையை அவளின் வாழ்நாளில் ஒருதடவையாவது அனுபவிக்கிறாள்,அதிகமாக துணைவரினால் வன்முறைக்குட்படுத்தப்படுகின்றாள்.

அந்தப்பகுதியில் கணிக்கப்பட்ட பெறுமானம், ஐந்தில் இரண்டு பெண்கள், அல்லது கிட்டத்தட்ட 40% ற்கு அதிகரித்துள்ளது.

பெண்களுக்கெதிரான வன்முறையானது பாரதூரமான சுகாதாரப்பாதிப்புக்கள், சேதங்கள் சூழ்ந்துகொள்ளல், அத்துடன் உடலியல், உளவியல், பாலியல் ரீதியான மற்றும் பாலியல் தொற்று நோய்கள், எச். ஐ. வி, மற்றும் திட்டமிடப்படாத கர்ப்பங்கள், மற்றும் உளநல பிரச்சனைகளை கொண்டிருக்கின்றது.

கொவிட்-19 இன் வெளிப்படுகையும் பரவலும் விஷேடமாக பெண்களையும் சிறுமிகளையும் வன்முறை மற்றும் துஷ்பிரயோகத்திற்குள்ளாகும் ஆபத்தை அதிககரித்துள்ளது.

அதிகளவில் அதிகரித்த பொருளாதார மற்றும் மன அழுத்தத்தின்போது அசைவுகளில் கட்டுப்பாட்டை ஏற்படுத்துதல், பெண்களை ஆதரவுவழங்கும் சேவைகளிலிருந்தும் நண்பர்களிடமிருந்தும் தனிமைப்படுத்தி வைத்திருக்கலாம் மற்றும் குற்றவாளிகளுக்கு அண்மையில் வைத்திருக்கும்.

வாழ்வாதரத்தை இழப்பதனால் பெண்கள் விகிதாசாரமற்றரீதியில் பாதிக்கப்படுகின்றனர், பொருளாதாரரீதியான பாதிப்புக்குள்ளாகும் மற்றும் தங்கியிருக்கும் தன்மையை அதிகரிக்கின்றனர்.

அவசரதொலைத்தொடர்புகள், பாதுகாப்பிடங்கள் மற்றும் சட்ட உதவி போன்ற வன்முறைகளுக்கு பதிலளிக்கும் சமூக பாதுகாப்பு சேவைகள் பல பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது.

இந்த மற்றும் பிற ஆதரவு சேவைகள் புதுப்பிக்கப்பட்டு பராமரிக்கப்படுவது மட்டுமல்லாமல், விரிவாக்கப்படுவதும் தவிர்க்கப்படமுடியாததாகும்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தில், ஐ.நா.வின் வருடாந்திர பிரச்சாரத்தின் தொடக்கத்தை குறிக்கும், பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயல்படுவதைக் குறிக்கும் உலக சுகாதார ஸ்தாபனம் பிராந்தியத்தில் உள்ள அனைத்து சுகாதாரத் துறை பங்குதாரர்களையும் இந்த தீவிரமானபொது சுகாதார பிரச்சினைக்கு தீர்வு காண ஒரு முக்கிய பங்கைக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

கொவிட்-19 பதில்செயலின்போது புதிய அல்லது உயர்ந்த பாலின-உணர்திறன் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் உறுப்பு நாடுகளை பாராட்டுகிறது மற்றும் பல முக்கிய துறைகளில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறது.

முதலாவதாக,கொள்கை வகுப்பாளர்கள் தப்பிப்பிழைப்பவர்களுக்கான சேவைகள் போதுமான கிடைக்கப்படுவதையும், அவர்களின் அத்தியாவசிய சுகாதார சேவைகளின் தொகுப்பில் உள்ளடக்கப்படுவதையும் தொடர்ந்து உறுதிப்படுத்த வேண்டும், அதன் பராமரிப்பிற்கு பிராந்தியம் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கிறது.

சமூக இடைவெளிகளை பேணும் நடவடிக்கைகள் செயன்முறைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆதரவு சேவைகளைத் தழுவுவதில் விஷேட கவனம் செலுத்தப்பட வேண்டும், எடுத்துக்காட்டாக நிகழ்நிலை(ஆன்லைனில்) வழங்குவதன் மூலம்.

சுகாதார ஊழியர்களைப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும், அவர்களில் 70% பெண்கள், தொற்று மற்றும் மன அழுத்தத்திலிருந்து மட்டுமல்லாது களங்கம் மற்றும் வன்முறையிலிருந்தும் பெண்கள் பாதுகாக்க முயற்சி எடுக்கப்படவேண்டும்.

இரண்டாவதாக, சுகாதார வசதி நிர்வாகிகள் தப்பிப்பிழைப்பவர்களுக்கு உள்நாட்டில் கிடைக்கக்கூடிய சேவைகளைப் பற்றிய தகவல்களைக் கண்டறிந்து புதுப்பித்த நிலையில் இருக்க திறந்திருக்கும் நேரம், தொடர்பு விவரங்கள் மற்றும் இவை தொலைதூரத்தில் வழங்கப்படலாமா, மற்றும் பரிந்துரை இணைப்புகளை நிறுவுதல் உள்ளடங்கலான திட்டமிட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும்.

சுகாதார வழங்குநர்கள், பிரச்சினை மற்றும் அதன் தாக்கங்களை அறிந்தவுடன், மருத்துவ சிகிச்சையையும், அனுதாபத்துடன் செவிமெடுப்பது, தேவைகளைப் பற்றி கேட்பது, மற்றும் உயிர் பிழைத்தவர்களை ஆதரிப்பதற்காக இணைப்பது போன்ற முதல்நிலை ஆதரவையும் வழங்க வேண்டும்.

மூன்றாவதாக, நம்பகமான சமூக உறுப்பினர்கள் தொடர்ந்து புத்திசாலித்தனமாக தகவல்களையும் ஆதரவையும் வழங்குகும் அதே நேரத்தில் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் மற்றும் தப்பிப்பிழைத்தவர்களுடன் பாதுகாப்பான வழிகளில் தொடர்பில் இருக்க வேண்டும்.

பெண்கள் தங்களுக்குத் தேவையான வன்முறைக்குப் பிந்தைய கவனிப்பை அணுக முடியும் என்பதை உறுதிப்படுத்துவதற்கு ஒற்றுமை மற்றும் ஆதரவின் முறைசார்ந்த மற்றும் முறைசாரா வலையமைப்புக்கள் அவசியம், மேலும் அவை எல்லா மட்டங்களிலும் கிடைக்க வேண்டும்.

பெண்களுக்கு எதிரான வன்முறையின் நிழல் தொற்றானது கொவிட்-19 எவ்வாறு பாலின ஏற்றத்தாழ்வுகள் உட்பட்ட முன்பே இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை எவ்வாறு வெளிப்படுத்துகிறது, சுரண்டுகிறது மற்றும் அதிகரிக்கிறது என்பதைக் காட்டுகிறது.

16 நாட்கள் பிரச்சாரம் டிசம்பர் 10 வரை நீடிக்கும், இது ஒவ்வொரு ஆண்டும் மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது, இது பெண்களின் உரிமைகள் என்பது மனித உரிமைகள் என்ற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த உரிமைகளை மதிக்கவும், பாதுகாக்கவும், நிறைவேற்றவும், மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை இல்லாத ஒரு பாலின-சமமான பிராந்தியத்தைப் பற்றிய எங்கள் பகிரப்பட்ட பார்வையை அடைய பிராந்தியத்தில் உள்ள உறுப்பு நாடுகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் தொடர்ந்து ஆதரவளிக்கும்.

Hot Topics

Related Articles