பாரிய சவால் நிறைந்த காலகட்டத்தை எதிர்கொண்ட போதிலும் 2019/20 நிதி ஆண்டில் சிறந்த செயல்திறனை கையகப்படுத்தி 8.5 பில்லியன் இலாபத்தை ஈட்ட நவலோக்க மருத்துவமனை குழுமத்திற்கு முடிந்துள்ளது.
இந்த நிதி ஆண்டில் முதலாவது காலாண்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல், குழுமத்தின் நிதி செயல்திறனை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியதுடன் இந்த நிதி ஆண்டின் இறுதி காலாண்டு உலகளாவிய கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக எதிர்பாராத அளவில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டது.
2019/20 நிதியாண்டில் நவலோக்க மருத்துவமனை குழுமத்தின் வரிக்கு பின்னரான இலாபம் 15.9 மில்லியன் ரூபாவாக அமைந்திருந்ததுடன் இது கடந்த நிதி ஆண்டில் 587.1 மில்லியன் ரூபா தேறிய நட்டத்துடன் ஒப்பிடுகையில் குழுமம் அடைந்த பெரும் வெற்றியாகவே கருதப்படுகிறது.
அத்துடன் கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் குழுமத்தின் சொத்துக்கள் 9%ஆல் அதிகரித்து 17,704 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. அத்துடன் 2018/19 நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் குழுமத்தின் மொத்த இலாபம் 51%இல் இருந்து 56% வரை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கையகப்படுத்தியுள்ளது.
இந்த நிதி ஆண்டிற்குள் நவலோக்க குழுமம் செலவு நிர்வாக முறைகள் பலவற்றை பின்பற்றியதுடன் குழுமத்திற்கு சொந்தமான ஆய்வுக்கூட வலைப்பின்னலை விஸ்தரிப்பதற்கு மற்றும் நவலோக்க கம்பஹா மருத்துவமனை மற்றும் நீர்கொழும்பு ஆகிய மருத்துவமனைகள் குறிப்பிடத்தக்க நிதி வளர்ச்சியை கையகப்படுத்துவதற்கு முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“கடந்த நிதியாண்டிற்குள் பொருளாதாரத்திற்கு பாரிய சவால்கள் ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொவிட்-19 வைரஸ் தொற்று போன்ற சம்பவங்களுக்கு மத்தியில் இருந்த போதிலும் வரவேற்கக்கூடிய நிதி செயல்திறனை கையகப்படுத்த முடிந்தமை குறித்து நாம் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறோம்.
எமது சரியான செலவு நிர்வாகம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைகளின் சரியான செயற்பாடுகள் 2020ஆம் ஆண்டில் சிறந்த நிதி செயற்திறனை நோக்கி எம்மை நகர்த்துவதற்கு இலங்கையின் முன்னணி நிபுணத்துவமுடைய வைத்திய சேவையாக நவலோக்க மருத்துவமனை குழுமத்தை ஒரு சிறந்த இடத்திற்கு கொண்டுவருவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.” என நவலோக்க மருத்துவமனை குழுமத்தின் உப தலைவர் ஹர்ஷித் தர்மதாஸ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மருத்துவத் துறையில் சிறந்த பெயரை தனதாக்கிக் கொண்டுள்ள நவலோக்க மருத்துவமனை குழுமம் 35 வருடங்களாக நாட்டின் தனியார் மருத்துவமனை துறையில் முன்னணி இடத்தில் திகழ்வதுடன் கலாநிதி ஜயந்த தர்மதாஸவின் தூரநோக்கு தலைமைத்துவத்துடன் அதிசிறந்த திறமையுடன் கூடிய வைத்திய மற்றும் தாதியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் நாட்டிலுள்ள மருத்துவமனைத் துறையில் காணக்கூடிய நவீன மருத்துவ வசதிகள் காரணமாக சர்வதேச மட்டத்தில் மருத்துவ சேவையை மலிவான கட்டணத்திற்கு வழங்குவதற்கு நவலோக்க மருத்துவமனை குழுமத்திற்கு முடிந்துள்ளது.
6.8 பில்லியன் ரூபா மூலதன முதலீடு செய்து கட்டப்பட்ட நவீன சுகாதார சேவை வசதிகளுடன் கூடிய நவலோக்க நிபுணத்துவ சுகாதார சேவை மத்திய நிலையம் (Nawaloka Specialty Centre) காலத்தின் தேவையை கருத்திற் கொண்டு அமைக்கப்பட்ட மருத்துவமனை சேவை வசதியாக எவ்வித சந்தேகமும் இன்றி கருதக் கூடியதாக உள்ளதென கூறமுடிவது தற்போது உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள சுகாதார பிரச்சினைகளை தொடர்ச்சியாக மருத்துவ சேவைகளை மேற்கொள்வதற்கு நவலோக்க மருத்துவமனைக் குழுமத்திற்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளதனால் ஆகும்.
400,000 சதுர பரப்பளவைக் கொண்ட சிறந்த சூழல் முழுவதிலும் பரந்திருக்கும் இந்த நிபுணத்துவ சேவை கட்டடத்திற்குள் 600 வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகள் மற்றும் பல்வேறு நோய்களுக்காக நிபுணத்துவ சிகிச்சைகளையும் இந்த கட்டடத்திற்குள் பெற்றுக் கொள்ள முடியும்.