கேமரா ஊடாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள தேசத்தின் பன்முகத்தன்மை

ஒரு நாட்டின் பன்முகத்தன்மை, அந்த நாட்டின் படைப்பாற்றல் உணர்வு, மாற்றம், தனித்துவம், சமூகத்தின் உணர்வு, நல்லிணக்கம் மற்றும் அன்பு போன்றவற்றிற்கு ஒளியேற்படுத்துகின்றது.

எமது இலங்கைதேசம், உலக வரைபடத்தில் ஒரு சிறிய நாடாகக் காணப்பட்டாலும், எமது தீவானது சிறந்த கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியத்தை பெருமைப்படுத்துகின்றது.

அது இன்னும் தனது நாட்டு மக்களால் கண்டுபிடிக்கப்படவில்லை. இங்கு பார்ப்பதற்கு இன்னும் நிறைய விடயங்கள் உள்ளன, இன்னும் கேட்கப்படாமலும் பொதுமக்கள் சாட்சியாகவும் காணப்படும் எண்ணற்ற கதைகள் நாடெங்கும் உள்ளன.

பன்முகத்தன்மை உணர்வை பேணுவதற்கு தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் கற்றல் அவசியம். அத்தோடு, நாட்டின் பிரஜைகள் ஒவ்வொருவருடைய உளமறிந்து செயற்படல் மற்றும் ஒருவருக்கொருவர் வலுவான பிணைப்பைக் கடைப்பிடிக்க ஆரம்பிக்க வேண்டும்.

நாம் தினமும் சந்திக்காதவர்களின் உண்மையான எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கச்செய்யும் நோக்கத்துடன் பன்முகத்தன்மையை உள்வாங்கி ஐக்கியத்தை ஊக்குவித்தல்எனும் தலைப்பின் கீழ் ஊடக மற்றும் தகவல் எழுத்தறிவுமையம் (CMIL) கையடக்கத்தொலைபேசி மூலமானஊடகவியல் திட்டத்தை தொடங்கியது.

நல்லிணக்கம் மற்றும் உறவுகளை வலுவூட்டுவதன் ஊடாக திடமான ஒருகதையை உருவாக்குவதன் முக்கியத்துவம், பொதுமக்களிடையே நம்பிக்கையைவளர்த்தல், மன்னித்தல் மற்றும் நெருக்கடிநிலையில் சிந்தித்தல் ஆகிய காரணிகள் மீதுகவனம் செலுத்துவதே இந்ததிட்டத்தின் நோக்கமாகும்.

கையடக்கத்தொலைபேசி ஊடானகதைகூறலின் பரந்தநிபுணத்துவத்தைப் பயன்படுத்துதல், பல்வேறுமத மற்றும் இனசமூகங்களான இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் ஆகியவற்றின் பன்முகத்தன்மையைப் வெளிக்காட்டவும், சமூகஊடகங்கள் மூலம் அவற்றை ஊக்குவிக்கவும், பன்முகத்தன்மையின் வலிமை குறித்து செயலில் உரையாடலை உருவாக்கும்நோக்கில் CMIL இந்த திட்டத்தை வடிவமைத்தது. இதன்மூலம் சமூகங்களிடையே உள்ளவேறுபாடுகளுக்கு பரஸ்பர புரிதலையும் மரியாதையையும் ஏற்படுத்துவது இதன்நோக்கமாகும்.

இத்தகைய கதைகளை ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசி கேமரா மூலம் கூறுவதற்காக, நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களின், வேறுபட்ட இன மற்றும் மத பின்னணியைச் சேர்ந்த எட்டு பெண் ஊடகவியலாளர்கள் வருகைதந்திருந்தார்கள்.

இதில் மும்மொழி பேசும் மற்றும் சகல மதத்தையும் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பங்குபற்றினார்கள். தெரிவுசெய்யப்பட்ட அமைவிடத்திற்கு அவர்கள் ஈடுபடுத்தப்படுவதற்கு முன்னர், பல்வகைமைத்தன்மையை பிரதிபலிக்கக்கூடியதான அவர்களின் கதைகள் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பமாகின. அதன் பின்னர் இளைய மற்றும் தனிப்பட்டவர்களின் பங்களிப்புடன் இலக்கு குழு கலந்துரையாடல்களின் ஊடாக பல்வமைத்தன்மை தொடர்பான தெளிவுடன் முதற்கட்டம் ஆரம்பமானது.

ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பிக்குமாறு பகிரங் கஅழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. இந்த செயற்பாடு வெற்றியளித்ததுடன், பல்வேறுகருத்துப்பதிவுகளும் zoom ஊடான இரண்டு வெவ்வேறு இலக்கு குழுகூட்டங்கள் மூலம் பதிவுசெய்யப்பட்டது. பால்நிலை சமத்துவ அடிப்படையிலும், வயதுப்பிரிவுகள், கல்விப்பின்னணி, புவியியல் ரீதியான பிரதேசங்கள், இனம் மற்றும் மதம் ஆகிய பல்வமைத் தன்மையின் பிரகாரம் விகிதாசார ரீதியில் பங்குபற்றல் இடம்பெற்றது.

பல்வமைத்தன்மை விடயம் தொடர்பாக பங்குபற்றியவர்களின் தனிப்பட்ட கண்ணோட்டம் மற்றும் எதிர்ப்பார்ப்பு என்பவற்றின் பிரகாரம் இலக்குகுழு கூட்டங்கள் இடம்பெற்றன. பிரஜைகளாக தங்களுக்குள் அல்லது அவர்களது சமூகங்களிடையே பொதுவானவை என அவர்களால் உணரப்பட்ட பிரச்சினைகள், மற்றும் பின்னர் குறிப்பிடப்பட்ட புவியியல் ரீதியான பிரதேசங்களை பட்டியலிடல், அதன் பின்னர் CMIL இனால் ஒப்படைக்கப்பட்ட கைடக்கத்தொலைபேசி மூலமான கதைகூறல் வெளிக்கொண்டுவரப்பட்டன.

கதைகளின் சூழல், இனம் மற்றும் மதத்தின் கூறுகளில் கவனம் செலுத்துவதோடு மட்டுமன்றி, மக்களது வாழ்வாதாரங்கள், சமூகங்கள், பெண் தலைமைத்துவம் உள்ளவீடுகள், கலை மற்றும் கலாசாரம், ஓரங்கட்டப்பட்ட சமூகங்கள், LGBTQI சமூகங்கள் மற்றும் வறுமையின் கீழுள்ள மக்கள் பற்றியும் விடயங்கள் பிரதிபலிக்கப்பட்டுள்ளன. இலக்குக்குழு அமர்வுகளின் உள்ளடக்கங்கள் மூலம் அடுத்தகட்ட கதைகூறலை முன்னெடுப்பதற்கு CMIL ஊழியர்களால் ஒருபயிற்சி செயலமர்வு நடத்தப்பட்டது. அந்தசெயலமர்வில் அவர்கள்கையடக்கத் தொலைபேசி மூலமான ஊடகவியல் தொடர்பில் கூடுதல் பயிற்சிகளையும் பெற்றுக்கொண்டனர்.

 

இதனைத் தொடர்ந்து பதுளை, மொனராகலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் திருகோணமலை போன்ற மாவட்டங்களில், பன்முகத்தன்மை, கலாசார பிரதிபலிப்புகள், மத நடைமுறைகள் மற்றும் சமூக உணர்வை வலியுறுத்தும் 11 வீடியோ கதைகளை எமது கதை சொல்லிகள் தயாரித்தனர்.

யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய பறைவாத்தியம், திருகோணமலை கிராமத்தைச் சேர்ந்த ஒற்றைத் தாய்மார்களின் வாழ்க்கை, கரடியன்குளத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கைமுறை, வாகரை பகுதியைச் சேர்ந்த வேடர்களின் வாழ்க்கையைப்பற்றிய பார்வை, சமூகத்தில்தனது அடையாளத்தை உறுதிப்படுத்த போராடும் திருநங்கைகளின் வாழ்க்கை, மொனராகலை மாவட்டத்தில் பாராவெல பகுதியில் வாழும்மக்களின் கதை, துப்பரவு பணியாளர்கள் சமூகத்தில் ஓரங்கட்டப்படுதல் மற்றும் வெல்லவாயபகுதியில் வாழும் ஒரு தொகுதி மட்பாண்ட தொழிலாளர்களில் வாழ்க்கைச்சுமை ஆகியவற்றை உள்ளடக்கி இக்கதைகள் அமைந்தன.

இக்கதைகள் யாவும் மக்களின் கவனத்தை ஈர்த்துவருகின்றன. பொதுவாக பிரதான ஊடகங்களில் பேசப்படாத பன்முகத்தன்மையின் அளவைப் பற்றிமக்களுக்கு அறிவூட்ட உதவும் ஒரு உறுதியான வழி இதுவாகும். ஒருவருடைய சொந்த பாரம்பரியத்தைத் தழுவுவது மட்டுமல்லாமல் மற்றவர்களின் பாரம்பரியம், கலாசாரம், மரபு ஆகியவற்றையும் மதிக்க வேண்டும் என்ற செய்தியை பரவச்செய்வது அவசியம். இந்த வீடியோக்கள் தற்போது பிரபலமான சமூகஊடக தளங்கள் வழியாக பரவலாக பகிரப்பட்டுவருகின்றன, மேலும் இந்த இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் ‘ஊடக மற்றும் தகவல் எழுத்தறிவுமையம் ’யூடியூப்சேனல் வழியாக பார்க்கலாம் -https://www.youtube.com/channel/UCkm5WWXvdZlqWi6Na8veesw/videos இந்ததிட்டத்திற்கு சர்வோதய அமைப்பின் ஆதரவில் CMIL மற்றும் அமெரிக்க தூதரகம் ஆகியன ஆதரவுவழங்கின.

ஊடக மற்றும் தகவல் எழுத்தறிவுமையம் என்பது ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாகும். இது விமர்சன ரீதியான தகவல் நுகர்வு (Critical Information Consumption) டிஜிட்டல் மீடியா மற்றும் தகவல் எழுத்தறிவு (Digital Media and Information Literacy) ஆகியவற்றை அனைத்து வயதினரிடையே ஊக்குவிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றது. இலங்கையில் தகவல்களை ஜனநாயக மயமாக்குவதில் அவர்களை சுறு சுறுப்பான மற்றும் துடிப்பானகுடி மக்களாக செயற்படுத்தும் நோக்கில் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.

சர்வோதய அமைப்பின் சிறு மற்றும் வலிமையான உதவித்திட்டத்தின் மூலம் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டது. இதற்கான நிதியுதவியை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் வழங்கியது.

Hot Topics

Related Articles