உலகம்

எகிப்தின் பண்டைய கால உடை அலங்காரத்துடன் பிரமீடு அருகே நின்ற மாடல் அழகிக்கு வந்த வினை!

எகிப்து நாட்டில் பண்டைய காலை உடை அலங்காரத்துடன் பிரமீடு அருகே நின்று புகைப்படம் எடுத்த மாடல் அழகி போலிஸார் கைது செய்துள்ளனர்.
எகிப்து நாட்டின் மாடலிங் துறையில் பிரபலமான சல்மா அல்-ஷைமிக்கு இன்ஸ்டாகிராமிலும் அதிக பொலேவர்ஸ் இருக்கின்றனல்.

இந்நிலையில் சல்மா அல்-ஷைமி கடந்த வாரம் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் உள்ள மிகவும் பிரபலமான மற்றும் 4 ஆயிரத்து 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த டிஜொசெர் பிரமீட்டுகள் அமைந்துள்ள இடத்தில் எகிப்தின் பண்டைய கால உடையணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.

அத்துடன் தான் எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் சல்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியதுடன் எகிப்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை மீறி பிரமீட்டு பகுதியில் கவர்ச்சியான முறையில் புகைப்படங்கள் எடுத்ததாக சல்மா மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதனையடுத்து சமூகவலைதளங்களில் சல்மாவின் புகைப்படங்கள் வைரலான சிலமணி நேரத்திலேயே அவர் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வரலாற்று சின்னமான பிரமீடு பகுதியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்தது, சர்ச்சைக்குரிய வகையிலான உடையில் பிரமீடு பகுதிக்கு சென்றது உள்ளிட்ட குற்றங்களுக்காக சல்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் சல்மாவை எகிப்தின் பண்டைய உடையில் புகைப்படம் எடுத்தமையால் புகைப்பட கலைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சல்மா மற்றும் அவரது புகைப்பட கலைஞர் இருவருமே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைகளின் பின்னர் நிபந்தனைகளுடன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், இவ்வாறான செயற்பாடு காரணமாக எகிப்தில் ஐந்து இளம் பெண்கள் நீதிமன்றத்தால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளளதுடன் 20,000 டாலர்களை அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

Hot Topics

Related Articles