உலகம்

உலகளாவிய ரீதியல் இலங்கைக்கு கிடைத்துள்ள முதலிடம்!

உலகளாவிய ரீதியல் இலங்கைக்கு கிடைத்துள்ள முதலிடம்!
மனித-யானை மோதல் காரணமாக உலகில் அதிக எண்ணிக்கையிலான யானைகளின் உயிரிழப்பு இலங்கையில் ஆண்டுதோறும் பதிவாகி வருவதாக பொது கணக்குகளுக்கான (கோபா) குழு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து மோதல் காரணமாக அதிக எண்ணிக்கையிலான யானைகளின்  உயிரிழப்பு பதிவகியுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை முதல் இடத்தில் உள்ளது.

இதேவேளை, மனித-யானை மோதல் காரணமாக அதிக எண்ணிக்கையிலான மனித இறப்புகள் பதிவகியுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது, இவ் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இலங்கையில் மனித-யானை மோதலுக்கு ஏதுவான பிரச்சினைகள் குறித்து நடைபெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பாக கோபாவுக்கு அறிவிக்கப்பட்டது, அதே நேரத்தில் இந்த விவகாரத்தை ஆய்வு செய்ய கோபாவினால் நியமிக்கப்பட்ட குழு அதன் அறிக்கை குறித்து குழுவுக்கு விளக்கமளித்தது.

மனித யானை மோதலால் இலங்கையில் ஒரு வருடத்திற்கு சராசரியாக 272 யானைகள் இறந்துவருவதாகவும் எனினும் கடந்த ஆண்டு மட்டும் 407 யானைகள் இறந்துள்ளதாகவும் இவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் மனித – யானை மோதலால் சராசரியாக ஒரு வருடத்திற்கு 85 மனிதர்கள் உயிரிழப்பதுடன், 2019 ஆம் ஆண்டில் மட்டும் 122 மனிதர்கள் இறந்துவிட்டதாக கோபாவுக்கு வழங்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hot Topics

Related Articles