உலகம்

ஆப்கானிஸ்தானில் பெண் தொலைக்காட்சி தொகுப்பாளினி சுட்டுக்கொலை! சர்வதேச அமைப்புகள் கண்டனம்

ஆப்கானிஸ்தானில் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றிய பெண் தொகுப்பாளினி மலாலா மைவாண்ட் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் நேற்று, வியாழக்கிழமை 25 வயதான பெண் தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளமை சர்வதேசத்தினால் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு தற்போது இஸ்லாமிய அரசு பொறுப்பேற்றுள்ளது.

கிழக்கு மாகாணமான நங்கர்ஹாரில் உள்ள எனிகாஸ் வானொலி மற்றும் தொலைக்காட்சியின் தொகுப்பாளரான மலாலாய் மைவாண்ட், அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது அவர் பயணித்த வாகனம் மீது தலைநகர் ஜலாலாபாத்தில் வைத்து இனம் தெரியாதவர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் வாகன ஓட்டுனரும் மலாலாயும் கொல்லப்பட்னர்.

இது ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறையை அதிகரித்து வரும் போக்கை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக சர்வதேச அமைப்புகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.

மலாய் மைவான்ட் தாயார் சமூக ஆர்வலராக இருந்து வந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
“மலாலாய் கொல்லப்பட்டதன் மூலம், பெண் பத்திரிகையாளர்களுக்கான பணித்திறன் இன்னும் சிறியதாகி வருகிறது, பத்திரிகையாளர்கள் தங்களது வேலைகளை அவர்கள் முன்பு செய்ததைப் போலவே தொடரத் துணியக்கூடாது” என்று ஆப்கானிஸ்தான் நய் எனப்படும் ஊடக வக்கீல் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாதத்தில் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட இரண்டாவது ஊடகவியலாளர் இவர் என்பதுடன் இந்த ஆண்டில் மொத்த 10. ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்களின் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அரசாங்கம், ஜெர்மன் தூதரகம், ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு மற்றும் பிரிட்டனின் தூதர் ஆகியோர் ஊடகவியலாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்களை கண்டித்துள்ளனர்.

 

Hot Topics

Related Articles