உலகம்

ஒவ்வாமை உள்ளவர்கள் கொவிட்19 தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டாம் – இங்கிலாந்து எச்சிரிக்கை!

உணவுகள் மற்றும் மருந்துகளுக்கு குறிப்பிடத்தக்களவு ஒவ்வாமை உள்ளவர்கள் பைஸர்/பயோஅன்ட்டெக் நிறுவனங்களினால் தயாரிக்கப்பட்ட கொவிட்19 தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டாம் என இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவைகள் திணைக்களம் (NHS) அறிவுறுத்தியுள்ளது.

இங்கிலாந்து தேசிய சுகாதார சேவையின் ஊழியர்கள் இருவருக்கு கொவிட்19 தடுப்பூசியை பெற்றுக்கொண்டதன் பின்னர் செவ்வாய்க்கிழமை ஒவ்வாமை விளைவுகள் ஏற்பட்டதையடுத்து இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மருந்துகள், உணவுகள், தடுப்பு மருந்துகள் போன்றவற்றினால் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளவர்களுக்கு இந்த அறிவுறுத்தல் பொருந்தும் எனவும் இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவைகள் திணைக்களம் (NHS) தெரிவித்துள்ளது.

மேற்படி இருவரும் கடும் ஒவ்வாமை நிலைமையை கொண்டவர்கள் எனவும், கடுமையான ஒவ்வாமையின்போது மட்டுமே பயன்படுத்தப்படும் அட்ரினலின் ஊசியை இவர்கள் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hot Topics

Related Articles