பார்சிலோனா மிருகக்காட்சிசாலையில் நான்கு சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அநடநாட்டு கால்நடை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
ஜாலா, நிமா மற்றும் ரன் ரன் என்ற மூன்று பெண்கள் சிங்கங்கள் மற்றும் கியம்பே என்ற ஆண் சிங்கம் என்பன கொரோனா வைரஸின் சில அறிகுறிகளைக் காண்பிப்பதைக் தொடர்ந்து அவற்றுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் முதன்முதலில் மிருகக்காட்சிசாலையில் இரண்டு ஊழியர்களும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிங்கங்களுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
சிங்கங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டன என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மிருகக்காட்சிசாலையின் ஊழியர்களுடன் விலங்குகள் பழக்கமாக இருப்பதால், மனிதர்கள் சோதிக்கப்படுவதைப் போலவே சிங்கங்களின் மீதும் பி.சி.ஆர் சோதனைகளை பராமரிப்பாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு முன்னர் நியூயார்க்கில் உள்ள பிராங்க்ஸ் மிருகக்காட்சிசாலையில் நான்கு புலிகள் மற்றும் மூன்று சிங்கங்கள் ஏப்ரல் மாதத்தில் COVID-19 க்கு சாதகமாக சோதனை செய்பட்டிருந்தன நிலையில் அவர்களின் உதவியை பெற பார்சிலோனாவின் கால்நடை சேவை அதிகாரிகள் தொடர்புகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.