உலகம்

WHO அங்கீகரித்தால் மட்டுமே இலங்கையருக்கு கொரோனா தடுப்பூசி : சுகாதர அமைச்சு முடிவு

உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்படும் வரை இலங்கை எந்த கோவிட் -19 தடுப்பூசியையும் பெறாது என்று தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீரா தெரிவித்துள்ளார்.

“இங்கிலாந்தில் அங்கீகரிக்கப்பட்ட COVID-19 தடுப்பூசி தற்போது -70C குளிர்ந்த வெப்பநிலையில் வைக்கப்படுவதன் மூலம் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது இலங்கைக்கு அந்த வசதி இல்லை. இதே வேளை வைரஸ் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இதுவரை எந்தவொரு தடுப்பூசிக்கும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை, ”என்று வைத்தியர் சமரவீரா கூறினார்.

ஆகவே, உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்படும் வரை இலங்கை எந்த கோவிட் -19 தடுப்பூசியையும் பெறாது என்று அங்கிகரிக்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இலங்கைக்கு கோவிட் -19 தடுப்பூசிகளைப் பெற முடியும் என்று சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீரா தெரிவித்தார்.

எவ்வாறாயினும், COVID-19 தடுப்பூசிக்கு தேவையான குளிர்ந்த வெப்பநிலையின் கீழ் தடுப்பூசிகளை சேமிப்பதில் நாடு நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ளும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இங்கிலாந்தில் அங்கீகரிக்கப்பட்ட ஃபைசர் COVID-19 தடுப்பூசி தற்போது -70C குளிர்ந்த வெப்பநிலையில் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் இல்லாவிட்டார் அதன் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுவதுடன் அது செயற்திறன் அற்றதாகிவிடும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக இவ் தடுப்பூசிகளை ஏனைய நாடுகளுக்கு விநியோகிப்பதில் மிகவும் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hot Topics

Related Articles