உலகின் மிக உயரமான மலை எவரெஸ்ட் சிகரம் உத்தியோகபூர்வ மதிப்பீட்டை விட 0.86 மீட்டர் உயரத்தில் இருப்பதாக நேபாளமும் சீனாவும் அறிவித்துள்ளன.
எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மறுமதிப்பீடு செய்து புதிதாக அளவிடப்பட்ட உயரம் 8848.86 மீட்டர் அல்லது 29032 அடி என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவரெஸ்ட் சிகரத்தின் முந்தைய உயரம் 8,848 மீட்டராக இருந்த நிலையில் தற்போது 0.86 மீட்டர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது அறிய முடிகின்றது.
சீனா மற்றும் நேபாளத்தின் எல்லையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் இரு நாடுகளிலிருந்தும் அணுகல் சாலைகள் உள்ள நிலையில், இரு நாடுகளும் அந்த உயரத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்க ஒப்புக் கொண்டுள்ளன.
இதற்கு முன்பு நேபாளம் எவரெஸ்டின் உயரத்தை 29,028.87 அடி (8,848 மீட்டர்) ஆகவும், சீனா 29017.16 அடி (8,844.43 மீட்டர்) ஆகவும் கணித்திருந்தது.
தற்போது இரு நாடுகளும் இணைந்து இதனை கணிப்பிட்டுள்ளமை முக்கிய அம்சமாக உள்ளது.